கிரிக்கெட்

சம்பள பேச்சுவார்த்தையால் கம்பீரை பயிற்சியாளராக நியமிப்பதில் தாமதம்.. பிசிசிஐ

Published On 2024-07-09 11:32 GMT   |   Update On 2024-07-09 11:32 GMT
  • தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது.
  • கவுதம் கம்பீருக்கு ஒரு அணிக்கு பயிற்சியளிப்பதில் அனுபவம் இல்லை.

இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ராகுல் டிராவிட் பதவிக்காலம் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருடன் முடிவுக்கு வந்தது.

இதனையடுத்து தலைமை பயிற்சியாளர் பதவிக்கு இரண்டு போட்டியாளர்களான கம்பீர் மற்றும் டபிள்யூ.வி. ராமன் ஆகியோரை பிசிசிஐ நேர்காணல் செய்தது. எனினும், சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2024 ஐ.பி.எல். தொடரில் இருந்தே இந்திய அணியின் அடுத்த பயிற்சியாளராக கவுதம் கம்பீர் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகின.

இந்நிலையில் கவுதம் கம்பீர் இடையே நடக்கும் சம்பள பேச்சுவார்த்தையால், இந்திய அணிக்கு புதிய தலைமை பயிற்சியாளரை நியமிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. கம்பீரை தலைமை பயிற்சியாளராக நியமித்து அவருக்கு முழு சுதந்திரம் வழங்கவும், தனியாக பேட்டிங் பயிற்சியாளர் நியமிக்காமல் அதுவும் கம்பீரின் மேற்பார்வையிலேயே நடக்கவும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன் மூலம் இந்திய அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தான் நியமிக்க உள்ளார் என்பது உறுதியாகி உள்ளது.

Tags:    

Similar News