`பிளே-ஆப்' சுற்றை எட்டுமா ராஜஸ்தான்? டெல்லி அணியுடன் இன்று மோதல்
- 4 இடங்களை வகிக்கும் அணிகள் பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும்.
- ராஜஸ்தான் ராயல்சும், டெல்லி கேப்பிட்டல்சும் இன்று மல்லுகட்டுகின்றன.
புதுடெல்லி, மே 7-
ஐ.பி.எல். போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லியில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் ரிஷப் பண்ட் தலைமையி லான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமை யிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.
டெல்லி அணி 5 வெற்றி, 6 தோல்வியுடன் 10 புள்ளி கள் பெற்று 6-வது இடத்தில் உள்ளது. பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்க இந்த ஆட்டத்தில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் அந்த அணிக்கு உள்ளது.
ஜெய்ப்பூரில் நடந்த ஆட்டத்தில் டெல்லி அணி 12 ரன்னில் ராஜஸ்தானிடம் தோற்று இருந்தது. அதற்கு டெல்லி கேப்பிடல்ஸ் பதிலடி கொடுத்து 6-வது வெற்றியை பெறுமா? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் 8 வெற்றி, 2 தோல்வியுடன் 16 புள்ளிகள் பெற்று 2-வது இடத்தில் உள்ளது.
அந்த அணி டெல்லியை மீண்டும் வீழ்த்தி 9-வது வெற்றியுடன் பிளே ஆப் சுற்று ஆர்வத்தில் உள்ளது.இந்த ஆட்டத்தில் ராஜஸ் தான் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்கு நுழையும் முதல் அணியாக இருக்கும். இரு அணிகள் மோதிய ஆட்டத்தில் ராஜஸ்தான் 15-ல், டெல்லி 13-ல் வெற்றி பெற்றுள்ளன.
இரு அணிகளும் வெற்றிக் காக கடுமையாக போராடு வார்கள் என்பதால் இந்த போட்டி மிகவும் விறுவிறுப் பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.