ஆன்மிக களஞ்சியம்

ஆதிசங்கரரும் 5 லிங்கங்களும்

Published On 2024-08-28 12:01 GMT   |   Update On 2024-08-28 12:01 GMT
  • கயிலாயத்தில் ஆதிசங்கரர், சிவபெருமானை வணங்கி பொங்கிப் பொலியும் பூரண அருளோடு புறப்பட்டார்.
  • அப்போது சங்கரரிடம் ஐந்து ஸ்படிகலிங்கங்களை... உலக நன்மைக்காக இறைவன் அருளினார்.

கயிலாயத்தில் ஆதிசங்கரர், சிவபெருமானை வணங்கி பொங்கிப் பொலியும் பூரண அருளோடு புறப்பட்டார்.

அப்போது சங்கரரிடம் ஐந்து ஸ்படிகலிங்கங்களை... உலக நன்மைக்காக இறைவன் அருளினார்.

சங்கரர் அந்த 5 லிங்கங்களில் முக்திலிங்கத்தையும் பதரிகாசிரமத்திலும், நேபாளத்தில் நீலகண்ட சேத்திரத்தில் வரலிங்கத்தையும்,

மோட்சலிங்கத்தைச் சிதம்பரத்திலும், போகலிங்கத்தைச் சிருங்கேரியிலும், யோகலிங்கத்தைக் காஞ்சீபுரத்திலும் பிரஷ்டை செய்தார்.

ஒருவர் தன் அன்றாட வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அனைத்து கடமைகளையும் ஆதிசங்கரர் தமது நூல்களில் தொகுத்து அளித்துள்ளார்.

விநாயகர், முருகன், சிவன், சக்தி, விஷ்ணு,சூரியன் ஆகிய 6 தெய்வங்களின் வழிபடும் முறையை ஒருங்கிணைத்து நெறிப்படுத்தியதால் ஆதிசங்கரருக்கு, "ஷண்மதஸ்தாபசாச்சாரியார்" என்ற பெயர் ஏற்பட்டது.

விநாயகர் முதல் ஆஞ்சநேயர் வரை அனைத்து கடவுள்கள் மீதும் சங்கரர் நிறைய பாடல்கள் பாடியுள்ளார். அந்த பாடல்கள் அனைத்தும் எளிய முறையில், உயர்வான தத்துவங்களைக் கொண்டதாக உள்ளன.

Tags:    

Similar News