ஆன்மிக களஞ்சியம்

ஆரத்தியைப் பார்த்தால் கோடி புண்ணியம்

Published On 2024-09-17 11:54 GMT   |   Update On 2024-09-17 11:54 GMT
  • முதலில் தீபத்தை பாபாவின் காலடியில் 4 முறை ஆரத்தி காட்டுவார்.
  • அதன் பின் வயிறு தொப்புள் அருகே 2 முறை ஆரத்தி சுற்றுவார். முகத்தினருகே ஒரு முறை ஆரத்தி சுற்றுவார்.

சீரடியில் பாபா உடலுடன் இருந்த பொழுது துவாரகா மாயயில் மத்திய ஆரத்தி மட்டும் தான் நடந்து கொண்டிருந்தது.

ஒரு நாள் விட்டு ஒரு நாள் பாபா சாவடியில் உறங்கிக் கொண்டிருந்த பொழுது சேஜ் ஆரத்தி, அடுத்த மறு நாள் காலையில் காகட ஆரத்தி நடந்து கொண்டிருந்தது.

தூப ஆரத்தி முதலில் சாதே வாடாவில் (இப்பொழுது குரு ஸ்தானம்), அதற்கு பிறகு தீட்சித் வாடாவில் (இப்பொழுது மியூசியம்) நடந்து கொண்டிருந்தது.

நான்கு ஆரத்திகளில் மொத்தம் 30 பாடல்கள் இருக்கின்றன.

ஆரத்தி என்பது சுலபமாக பக்தியை வெளிகாட்ட அக்னியோடு சம்மந்தப்பட்ட ஒரு வழிபாடு.

கூட்டு பக்தி வழிபாட்டில் நெய்யில் வத்தியை ஊறவிட்டு தீபங்காட்டி பக்தி கீதங்கள் பாடுவார்கள்.

ஆரத்தி கொடுத்ததை இரண்டு கைகளால் வாங்கி கண்களில் ஒற்றிக் கொள்கிறார்கள்.

சாயிபாபா குரு தேவுக்கு ஆரத்தி கொடுத்து கொண்டிருக்கும் பொழுது  கண்ணாறப் பார்ப்பது புண்ணியமும், யோகமும், ஷேமமும் கூட, ஆரத்தி நடக்கிற பொழுது பூசாரி அந்த தீபத்தை வலது கையில் காண்பித்து இடது கையில் மணியை ஆட்டிக் கொண்டு ஆரத்தி செய்வார்.

முதலில் தீபத்தை பாபாவின் காலடியில் 4 முறை ஆரத்தி காட்டுவார்.

அதன் பின் வயிறு தொப்புள் அருகே 2 முறை ஆரத்தி சுற்றுவார். முகத்தினருகே ஒரு முறை ஆரத்தி சுற்றுவார்.

தலையில் இருந்து கால்வரை உடம்பு முழுவதும் ஏழு முறை சுற்றுவார்.

அதன் பிறகு பாதத்தில் இருந்து தலை வரை 3 முறை ஆரத்தி சுற்றி ஆரத்தி பாடல்கள் பாடுவார்கள்.

பாபா உடலோடு இருக்கிற பொழுது இப்படித்தான் ஆரத்தி எடுக்கப்பட்டது.

Similar News