ஆன்மிக களஞ்சியம்

அபிராமி-10

Published On 2024-08-20 12:00 GMT   |   Update On 2024-08-20 12:00 GMT
  • திருக்கடையூர் தலத்தில் ஈசனுக்கு முன்பே அம்பிகை வந்து அருள் செய்ததாக சொல்கிறார்கள்.
  • இலங்கை அரசன் ஒருவன் திருக்கடையூருக்கு வந்து அபிராமி அன்னைக்கு திருப்பணி செய்துள்ளான்.

1.திருக்கடையூர் தலத்தில் ஈசனுக்கு முன்பே அம்பிகை வந்து அருள் செய்ததாக சொல்கிறார்கள்.

2. இலங்கை அரசன் ஒருவன் திருக்கடையூருக்கு வந்து அபிராமி அன்னைக்கு திருப்பணி செய்துள்ளான்.

3. தமிழ்நாட்டில் உள்ள சக்தி தலங்களில் அம்பிகை மீது பாடப்பட்ட துதிகளில் "அபிராமி அந்தாதி"யே அதிகமாக பாடப்பட்டதாகும்.

4. அபிராமி மீது பாடப்பெற்ற அந்தாதிகளை நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்கள் ஆய்வு செய்து உரை எழுதியுள்ளனர்.

சமீபத்திய காலங்களில் பாரதியார், கண்ணதாசன், கி.வா.ஜகன்நாதன் உள்பட பலர் அபிராமி அந்தாதிக்கு உரை எழுதியுள்ளனர்.

5. அபிராமி அந்தாதியில் உள்ள 100 பாடல்களும் அன்னையின் சன்னதியில் சலவைக்கல்லில் பொறித்து பதிக்கப்பட்டுள்ளன.

6. அன்னை அபிராமிக்கு ஆதிசங்கரர் கம்மல் செய்து அணிவித்தார். அந்த கம்மல் இன்றும் உள்ளது.

7. அம்மனின் 108 சக்தி பீடங்களில் இதுவும் ஒன்றாகும்.

8. அபிராமி அம்மனுக்காக ரூ.5 கோடியில் தயாரிக்கப்பட்டுள்ள நவரத்ன அங்கி உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தை அமாவாசை தினத்தன்று அபிராமிக்கு இந்த அங்கி அணிவிக்கப்படும்.

9. அபிராமியை புகழ்ந்து பாடி புகழ் பெற்ற அபிராமி பட்டரின் வாரிசுகள் இன்றும் உள்ளனர். அவர்கள் திருக்கடையூரில் நவராத்திரி திருவிழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள்.

10. கவிஞர் கண்ணதாசன் திருக்கடவூர் பதிகத்தில், "அற்புத சக்தி அபிராமி" என்றும், "மமதை அறுத்து மனதினைக் காக்கும் மந்திர சக்தி அபிராமி" என்றும் பாடுவார்.

Tags:    

Similar News