ஆன்மிக களஞ்சியம்

அபூர்வ கலையம்சத்துடன் விளங்கும் ஸ்தம்ப சரபேஸ்வரர்

Published On 2024-08-12 10:57 GMT   |   Update On 2024-08-12 10:57 GMT
  • ஆலய மூலவருக்கு ஸ்தம்ப சரபேஸ்வரர் என்று பெயர்.
  • இவர் நின்ற நிலையில் நான்கு கைகளும், இரு முகமும் உடையவராக விளங்குகிறார்.

சென்னையை அடுத்த திரிசூலம் என்னுமிடத்தில் அபூர்வமான கலையம்சம் நிறைந்த விக்கிரகத்துடன் அமைந்துள்ளது இக்கோவில்.

ஆலய மூலவருக்கு ஸ்தம்ப சரபேஸ்வரர் என்று பெயர்.

இவர் நின்ற நிலையில் நான்கு கைகளும், இரு முகமும் உடையவராக விளங்குகிறார்.

இரு கைகளில் மான், மழுவினை ஏந்தியிருப்பதுடன், இரு கைகளால் நரசிம்மரை மடியில் கிடத்தி பிடித்துக்கொண்டிருப்பது போல் அமைந்துள்ளது சிறப்புமிக்க ஒன்றாகும்.

Tags:    

Similar News