ஆன்மிக களஞ்சியம்

அகத்தியர் உட்பட புண்ணிய மகான்கள் நீராடிய தீர்த்தம்

Published On 2024-10-16 11:16 GMT   |   Update On 2024-10-16 11:16 GMT
  • பெருமாள் வலப்புறம் உள்ள ஐம்பொன்னாலான கிருஷ்ணன் விக்ரகம் கண்ணையும் கருத்தையும் கவரும்.
  • கருவறையைச் சுற்றி வரும்போது ஆண்டாள் சன்னதியைக் காணலாம்.

இது நீள் சதுர வடிவில் உள்ளது. கோவிலின் முன் தேர் ஒன்று எழிலுற நிற்கிறது. கோவிலின் தோரண வாயிலில் பலி பீடம்.

அதன் அருகே அமைந்த மேடையில் பெருமாள் பாதங்கள் உள்ளன. வலப்புறத்தில் மடைப்பள்ளி.

அதன் எதிரே அமைந்த மண்டபத்தில் தான் இராபத்து பகல்பத்து விழா நடைபெறும்.

பெருமாள் சன்னதிக்கு பின் ஆதிகேசவ பெருமாள் சன்னதி உள்ளது. எதிரே பெரிய வடிவில் கல்லில் வடித்த கருடன்.

கருவறை முன் நின்ற நிலையில் துவார பாலகர்.

ரங்க மண்டபம் என்னும் மகா மண்டபத்தைக் கடந்ததும் பக்தோசித சன்னதி சடகோபன் என்னும் பெருமாள் திருவடி நிலை ஆதிசேஷன் வடிவில் அமைந்திருப்பது இத்தலத்தில் தான்.

பெருமாள் வலப்புறம் உள்ள ஐம்பொன்னாலான கிருஷ்ணன் விக்ரகம் கண்ணையும் கருத்தையும் கவரும்.

கருவறையைச் சுற்றி வரும்போது ஆண்டாள் சன்னதியைக் காணலாம்.

தீர்த்தங்கள்

பிரம்ம தீர்த்தம், பைரவ கலாவர்த்த தீர்த்தம், கவுதம தீர்த்தம், அகத்திய தீர்த்தம், வராக தீர்த்தம், அனுமத் தீர்த்தம், பாண்டவ தீர்த்தம் போன்ற தீர்த்த நிலைகள் இருக்கின்றன.

இதில் நீராடினால் பாவம் தொலையும், நன்மை விளையும். அகத்தியர் முதலிய பெரிய மகான்கள் நீராடிய புண்ணிய தீர்த்தங்கள் இவை.

Similar News