ஆன்மிக களஞ்சியம்

பாபாவின் மகிமைகள்-அந்தரத்தில் தூங்கிய பாபா

Published On 2024-09-17 11:06 GMT   |   Update On 2024-09-17 11:06 GMT
  • சீரடி சாயி பாபா படுத்து தூங்குவதற்கு ஒரு சணல் துணியையே பயன்படுத்தி வந்தார்.
  • தரையில் விரித்து உட்காருவதற்கும், குளிரும் போது போர்வையாகப் போர்த்திக் கொள்வதற்கும் பயன்படுத்தினார்.

சீரடி சாயி பாபா படுத்து தூங்குவதற்கு ஒரு சணல் துணியையே பயன்படுத்தி வந்தார்.

தரையில் விரித்து உட்காருவதற்கும், குளிரும் போது போர்வையாகப் போர்த்திக் கொள்வதற்கும் பயன்படுத்தினார்.

இதைக் கண்ட பக்தர்கள் பாபா இப்படி ஒரே துணியைப் பயன்படுத்துகிறாரே என்று வருந்தினார்கள்.

இதனால் அவர்கள் பாபா படுத்து உறங்க ஐந்து அடி நீளமும் ஒரு அடி அகலமும் கொண்ட பலகையைக் கொண்டு வந்து பாபாவிடம் கொடுத்து, பாபா இனிமேல் நீங்கள் இந்தப் பலகையில் தான் படுத்து உறங்க வேண்டும் என்று வேண்டினார்கள்.

பாபாவும் பக்தர்களின் வேண்டுகோளை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டார்.

பக்தர்கள் கொடுத்த மரப்பலகையை மசூதியின் கூரையிலிருந்து மூன்று அடி தாழ்வாகவும், தரையிலிருந்து ஏழடி உயரத்திலும் அந்தரத்தில் இருக்குமாறு செய்து படுத்துக் கொள்வார்.

இந்த அதிசயத்தைக் கண்டு பாபாவின் மகிமை மேலும் மேலும் பரவியது.

Similar News