ஆன்மிக களஞ்சியம்

அம்மையும் அப்பனும் எதிர் எதிரே நிற்பது ஏன்?

Published On 2024-08-20 11:04 GMT   |   Update On 2024-08-20 11:04 GMT
  • திருக்கடையூர் கோவில் கம்பீரமாக உயர்ந்து விளங்கும் ராஜகோபுரத்துடன் அமைந்த பெரிய கோவிலாகும்.
  • கோவிலின் மூன்று பிரகாரங்களையும் கடந்து சென்றால் மகாமண்டபம் வரும்.

திருக்கடையூர் திருத்தலத்தில் அமிர்தகடேசுவரர் மேற்கு திசை நோக்கியும், அபிராமி அன்னை கிழக்கு திசை நோக்கியும் எதிர்எதிரே தனி சன்னதியில் உள்ளனர்.

இதன் பின்னணியில் ஒரு சிறப்பம்சம் கூறப்படுகிறது.

திருக்கடையூர் கோவில் கம்பீரமாக உயர்ந்து விளங்கும் ராஜகோபுரத்துடன் அமைந்த பெரிய கோவிலாகும்.

கோவிலின் மூன்று பிரகாரங்களையும் கடந்து சென்றால் மகாமண்டபம் வரும்.

இம்மண்டபத்தில் கால சம்கார மூர்த்தி தனி சன்னதியில் உள்ளார். அங்கு அவரது செப்புத் திருமேனியைக் கண்டு வழிபடலாம்.

காலனை சம்ஹாரம் செய்த அவசரத்தில், தம் திருக்கரங்களில் சூலம், மழு, பாசம், தர்சனி தரித்தவராய்த் தெற்கு நோக்கி எழுந்தருளி நிற்கிறார்.

உதைபட்ட காலன், திருவடியின் கீழ் உருண்டு கிடக்கிறான்.

வரம் பெற்ற மார்க்கண்டன் கை கூப்பி வணங்கி நிற்க, அன்னை சாட்சியாகக் கருணைக்கண் கொண்டு அருகில் நிற்க கண்டு வழிபடலாம்.

கால, சங்காரப் பெருமானைக் கண்டு வழிபடுவோர் நமனுக்கு அஞ்சாது நெடுங்காலம் வாழலாம்.

Tags:    

Similar News