ஆன்மிக களஞ்சியம்

அரங்கன் தொண்டில் ஐம்பது ஆண்டுகள்!

Published On 2024-09-04 12:11 GMT   |   Update On 2024-09-04 12:11 GMT
  • அவர் அங்கு ஞானச்செங்கோல் ஓச்சிய காலத்தில் ஏற்படுத்திய நெறிமுறைகள் இன்றளவும் பின்பற்றப்படுகின்றன.
  • கோவிற்கலைகளில் வல்லவர்களான பலருக்கும் வேலை வாய்ப்பு அளித்தார்.

ராமானுஜர் திருநாராயணபுரம் செல்வதற்கு முன்னால் 30 ஆண்டுகளும், அங்கிருந்து திரும்பி வந்த பிறகு 20 ஆண்டுகளும் ஆக மொத்தம் 50 ஆண்டுகள் திருவரங்கன் திருத்தொண்டுகள் புரிந்தார்.

அவர் அங்கு ஞானச்செங்கோல் ஓச்சிய காலத்தில் ஏற்படுத்திய நெறிமுறைகள் இன்றளவு வைணவத் திருத்தல்களில் பின்பற்றப்படுகின்றன.

கோவிற்கலைகளில் வல்லவர்களான பலருக்கும் வேலை வாய்ப்பு அளித்தார்.

திருவீதிகளில் வேதங்கள் மற்றும் பிரபந்தங்களை ஓதச் செய்தார். அவற்றைக் கற்பிக்கவும் ஏற்பாடுகள் செய்தார்.

சோழச் சிற்றரசன் அகளங்கனிடம் கோவில் நிர்வாகத்தை ஒப்படைத்து, அது வெவ்வனே செயற்பட வழிவகுத்தார்.

அரங்கனுக்குரிய நிவேதனங்கள் குறைவின்றித் தளிகை செய்யப்பட்டன. பக்தர்களுக்கு பிரசாதங்கள் தாராளமாக வழங்கப்பட்டன.

திருக்கோவிலைச் சுற்றி மண்டபங்கள், நந்தவனங்கள், மலர்ச்சோலைகள், மருத்துவமனைகள், நூல் நிலையங்கள் போன்ற அனைத்தும் நிறுவப்பட்டன.

மொத்தத்தில் திருக்கோவில் அமைதி அளிக்கும் வழிபாட்டுத் தலமாகவும், கலைகளை வளர்க்கும் இடமாகவும், மக்கள் நலப் பணிகளைச் செய்யும் அறச்சாலையாகவும் விளங்கின.

குறிப்பாக, திருக்கோவிலில் சமத்துவ பக்தி நிலவச் செய்ததில் ராமானுஜர் முன்னோடியாக திகழ்ந்தார்.

தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே என்று அனைவரும் போற்றும் அளவிற்கு திருவரங்கத்தைச் செழிக்கச் செய்தார் உடையவராகிய ராமானுஜர்.

நூற்றிருபது வயது முதுமையிலும் ராமானுஜர் சீடர்களுக்குப் பாடம் கற்பித்து வந்தார்.

ஒருநாள் பாடம் சொல்லி வந்தபோது, ராமானுஜர் மவுனத்தில் ஆழ்ந்தார்.

அப்போது அவருடைய கண்களிலிருந்து இரண்டு சொட்டு ரத்தம் வந்தது. சீடர்கள் செய்வது அறியாது திகைத்தார்.

சிறிது நேரம் கழித்து மவுனம் கலைந்து, உடையவரே மவுனத்தில் உதிரம் சொட்டிய காரணத்தை விளக்கினார்.

Tags:    

Similar News