ஆன்மிக களஞ்சியம்

பாபா தட்சணை வாங்கியது ஏன்?

Published On 2024-09-16 10:42 GMT   |   Update On 2024-09-16 10:42 GMT
  • தட்சணை கொடுப்பவர்கள் யார்? எதிர்காலத்தில் நல்ல அறுவடை செய்யப் போகிறவர்கள்.
  • என்னுடைய பக்கிரிக்குப் (குருவுக்கு) பலர் கடன் பட்டிருக்கிறார்கள்.

பக்தர்களிடம் பாபா தட்சணை வாங்குவது ஒரு காலக்கட்டத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.

அதற்கு பாபா பம்பாய் பக்தர்களிடம் விளக்கம் அளித்தார்.

"நான் யாரிடமாவது ஒரு ரூபாய் தட்சணை வாங்குகிறேன் என்றால் அவருக்குப் பத்து மடங்காக நான் திருப்பிக் கொடுக்கக் கடமைப்பட்டவன் என்று பொருள்.

நான் எதனையும் இலவசமாகப் பெறுவதில்லை. அதற்குரிய விலையைக் கொடுத்து விடுகிறேன்.

நான் எல்லோரிடமும் தட்சணை வாங்குவதில்லை. என்னை ஆளும் பக்கிரி தான் (குரு) யாரிடம் தட்சணை பெற வேண்டும் என்று எனக்கு கட்டளையிடுகிறார். அவர்களிடம் மட்டுமே தட்சணை பெறுகிறேன்.

தட்சணை கொடுப்பவர்கள் யார்? எதிர்காலத்தில் நல்ல அறுவடை செய்யப் போகிறவர்கள்.

என்னுடைய பக்கிரிக்குப் (குருவுக்கு) பலர் கடன் பட்டிருக்கிறார்கள்.

அவர்கள் யார் என்று எனக்கு அடையாளம் தெரியும்.

அவர்கள் என்னைத் தேடிவரும் போது அவர்களிடமிருந்து எனது பக்கிரியின் கடனை தட்சணையாக வசூலிக்கிறேன்.

நானும் ஏற்கனவே கொடுத்ததை தட்சணையாகக் கேட்கிறேன்.

அதனால் தான் தருகிறார்கள். அந்த தட்சணையை சொந்த லாபத்திற்காகப் பயன்படுத்துவதைப் பாவமாகக் கருதுகிறேன். அந்த தட்சணை தர்மத்தின் வழி செல்ல வேண்டும்.

இவ்வாறு தட்சணையின் மகத்துவத்தை பாபா பாமனுக்கும் புரியும் வண்ணம் விளக்கினார்.

அதன் பின்னர் விதண்டாவாதக்காரர்கள் வாயடைத்துப் போயினர்.

Similar News