ஆன்மிக களஞ்சியம்

பைரவர் கோவில்கள்-பிரம்மாவால் பூஜிக்கப்பட்ட தலம்

Published On 2024-08-30 11:39 GMT   |   Update On 2024-08-30 11:39 GMT
  • இத்தலத்திலுள்ள மலைக்கோவில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் காட்சி தருகிறார்.
  • இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோவில் உள்ளது.

சீர்காழி சட்டநாதர் ஆலயம்:

சட்டநாதராக விளங்கும் பைரவ மூர்த்திக்குத் தலைமைத் தானமாக விளங்குவது சீர்காழியாகும்.

திருஞான சம்பந்தர் அவதரித்த மாவட்டத்தில் அமைந்துள்ள இவ்வூரில் பிரம்மாவால் பூசிக்கப்பட்ட பிரம்மபுரீஸ்வரர் என்ற பெரிய சிவாலயம் உள்ளது.

இத்தலத்திலுள்ள மலைக்கோவில் உச்சியில் தென்முகம் நோக்கி நின்ற கோலத்துடன் சட்டநாதர் காட்சி தருகிறார்.

இவர் பைரவரின் அவதாரமே. பிரகாரத்தில் அஷ்ட பைரவர்களுக்கென்று தனிக்கோவில் உள்ளது.

காஞ்சிபுரம் வைரவேச்சுரம்:

திருக்கண்டியூரில் பிரம்மனின் சிரத்தைக் கொய்த பாவம் தீர சிவ வழிபாடு செய்த பைரவரின் தனி ஆலயம் காஞ்சிக்குத் தென்மேற்கில் அழிப்படை தாங்கி என்னுமிடத்தில் உள்ளது.

இங்கு பிரம்மன்சிவலிங்கத்தை வைத்து வழிபட்டதுடன் தனது ஐந்தாவது சிரத்தைக் கிள்ளியபைரவருக்கும் தனி சன்னதி அமைத்து வழிபாடு செய்தான்.

இதன் அருகிலேயே இந்தக் கால பைரவர் அஷ்ட பைரவராகி எட்டு வடிவங்களுடன் எட்டு சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்ட வைரவேச்சுரம் என்ற சிவாலயமும் உள்ளது.

இத்தலத்தின் உற்சவர் காஞ்சி ஏகாம்பரநாதர் கோவிலில் உள்ளது.

Tags:    

Similar News