ஆன்மிக களஞ்சியம்

பக்தர் கொடுத்த பையை பத்திரமாக வைத்துக் கொண்ட சாய்

Published On 2024-09-11 10:53 GMT   |   Update On 2024-09-11 10:53 GMT
  • அந்த பையை தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை யாரையும் தொட பாபா அனுமதித்ததே இல்லை.
  • எனவே அந்த பையில் என்ன இருக்கிறது என்பதை அறிய எல்லாரிடமும் ஆவல் ஏற்பட்டது.

1918&ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15&ந்தேதி பாபா, சமாதியான போது அவர் வைத்திருந்த பழைய பை ஒன்றை அவரது பக்தர்கள் எடுத்துப் பார்த்தனர்.

அந்த பையை தன் வாழ்நாளின் கடைசி நிமிடம் வரை யாரையும் தொட பாபா அனுமதித்ததே இல்லை.

எனவே அந்த பையில் என்ன இருக்கிறது என்பதை அறிய எல்லாரிடமும் ஆவல் ஏற்பட்டது.

அந்த பைக்குள் பச்சை நிற நீண்ட அங்கி உடையும், பச்சை நிற துணி தொப்பியும் இருந்தது. காசிராம் என்ற பக்தர் அந்த உடையை பாபாவுக்காக தைத்து கொடுத்திருந்தார்.

பாபா உடல் சமாதிக்குள் வைக்கப்பட்ட போது, அவர் பயன்படுத்திய சில பொருட்களும், அந்த பச்சை நிற உடையுடன் கூடிய பையும் வைக்கப்பட்டது.

பாபா அணிந்த வெள்ளை நிற உடைகள் சில, துவாரகமாயியில் இருந்தன. அவை அனைத்தும் இன்றும் சீரடி தலத்தில் உள்ள ''சாய்பாபா மியூசியம்'' அறையில் வைக்கப்பட்டுள்ளன.

சீரடி செல்பவர்கள் மியூசியத்துக்கு சென்று பாபா மேனியில்பட்ட அந்த வஸ்திரங்களை கண் குளிரக் கண்டு வணங்கி வரலாம். அந்த வணக்கமே நிச்சயம் கோடி புண்ணியம் தரும்.

Similar News