ஆன்மிக களஞ்சியம்

இந்து முஸ்லீம் இணக்கத்தை மேம்படுத்திய பாபா

Published On 2024-09-13 11:19 GMT   |   Update On 2024-09-13 11:19 GMT
  • அவரவர்களுக்கு விருப்பமான கோவில்களுக்குச் செல்லுதல், தமது இஷ்டத் தெய்வங்களை வணங்குதல் ஆகியவற்றை பாபா ஆதரித்தார்.
  • தெய்வங்களின் படங்களையும் சிவலிங்கங்களையும், பாதுகைகளையும் பாபா தாமே தம் பக்தர்களுக்குக் கொடுப்பது உண்டு.

எல்லா மதங்களின் அடிப்படைக் கொள்கைகளை ஏற்றுக் கொள்ளுதல், சகிப்புத்தன்மை, கடவுள் நம்பிக்கை முதலியவை பக்தர்களிடம் இருக்க வேண்டும் என்பதை பாபா அடிக்கடி வலியுறுத்தினார்.

அவரவர்களுக்கு விருப்பமான கோவில்களுக்குச் செல்லுதல், தமது இஷ்டத் தெய்வங்களை வணங்குதல் ஆகியவற்றை பாபா ஆதரித்தார்.

தெய்வங்களின் படங்களையும் சிவலிங்கங்களையும், பாதுகைகளையும் பாபா தாமே தம் பக்தர்களுக்குக் கொடுப்பது உண்டு.

தம்முடைய படங்களையே கூட அவர் அளிப்பதுண்டு. பக்தர்களின் கூட்டம் பெருகு வதற்கு இதுவும் ஒரு காரணமாயிற்று.

பாபாவின் வாழ்நாள் இறுதி வரை அவர் இஸ்லாமியரா, இந்துவா என்று எவராலும் அறிய முடியவில்லை.

அவருடைய உபதேசங்களில் இந்து ,முஸ்லிம் ஒற்றுமை இழையோடியது.

அது மட்டுமல்லாமல் அவருடைய அன்பு என்ற அடிப்படைக் கொள்கையினால் மக்களை சாதி சமய வேறுபாடின்றி ஒருங்கிணைத்தார்.

படிப்படியாக ஒருங்கிணைந்த ஒரு சமுதாயத்தில் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் படியான ஒரு வழிபாட்டு சடங்குகளில் இஸ்லாமியர் தலையிடாமல் இருந்தனர்.

அதைப்போலவே இஸ்லாமியர் வழிபாட்டு நேரத்தில் இந்துகள் தலையிடாமல் இருந்தனர். மத சகிப்புத்தன்மையை பாபா வலியுறுத்தினார்.

Similar News