ஆன்மிக களஞ்சியம்

இஸ்லாமியர் இந்துவை இணைக்கும் ராமநவமி-உருசு

Published On 2024-09-13 11:37 GMT   |   Update On 2024-09-13 11:37 GMT
  • அதற்கு பாபாவின் ஆசியும் அனுமதியும் கிடைத்தது . உருசு விழாவை ராம நவமி நாளன்று நடத்துவது என்று முடிவாயிற்று.
  • இதனால் இஸ்லாமியர்களும் இந்துகளும் ஒன்று படவும் அவர்களுடைய விழாக்களும் ஒருங்கிணைந்து நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.

கோபர்கானில் இருந்த கோபால்ராவ்குண்டு என்பவர் பாபாவின் பரம பக்தர்களில் ஒருவர்.

அவருக்கு மூன்று மனைவியர் இருந்தனர் என்றாலும் அவருக்கு மூன்று மனைவியர் இருந்தும் பிள்ளைப்பேறு இல்லாமல் இருந்தது.

பின்னர் பாபாவின் ஆசியால் அவருக்கு ஒரு மகன் பிறந்தான்.

அதனால் அளவு கடந்த மகிழ்ச்சி அடைந்த அவர் சிறப்பாக ஏதேனும் செய்ய வேண்டும் என்று விரும்பினார்.

உருசு என்ற விழாவை சீரடியில் நடத்தலாம் என அவருக்குச் தோன்றியது. தம் விருப்பத்தைச் சில பக்தர்களிடம் கூற அவர்கள் அதை ஏற்றுக் கொண்டார்கள்.

அதற்கு பாபாவின் ஆசியும் அனுமதியும் கிடைத்தது . உருசு விழாவை ராம நவமி நாளன்று நடத்துவது என்று முடிவாயிற்று.

இதனால் இஸ்லாமியர்களும் இந்துகளும் ஒன்று படவும் அவர்களுடைய விழாக்களும் ஒருங்கிணைந்து நடக்கவும் வாய்ப்பு ஏற்பட்டது.

மேளதாளத்துடன் நடந்த ஊர்வலத்தின் போது தட்டுகளில் சந்தனம் எடுத்துச் செல்லப்பட்டது.

ஊர்வலம் சீரடி தெருக்களின் வழியே சென்று பின்னர் மசூதிக்குத் திரும்பும்.

ஒரே நாளில் இந்துக்கள் கொடிகளை ஏற்றிச் செல்ல இஸ்லாமியர்கள் சந்தனத்தை எடுத்துச் செல்ல இரு மத்தினரும் எந்த மன வேற்றுமையுமின்றி மகிழ்ச்சியுடன் விழாவைக் கொண்டாடினர்.

Similar News