ஆன்மிக களஞ்சியம்

எம பயம் போக்கும் கால சம்ஹார மூர்த்தி

Published On 2024-08-19 11:15 GMT   |   Update On 2024-08-19 11:15 GMT
  • இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார்.
  • இடது பக்கத்தில் பலாம்பிகை திருமகள் கலைமகளாக விளங்குகின்றார்.

திருக்கடையூர் தல மகாமண்டபத்தின் வடபால் சிற்ப வேலைப்பாட்டுடன் கூடிய அழகிய சபையில் இயமனை நிக்கிரகானுக்கிரகம் பண்ணின அவசரத்தில் (தோற்றநிலை) தெற்குமுகமாக எழுந்தருளியுள்ளார்.

வலது திருக்கரங்களில் சூலமும் மழுவும் உள்ளது. இடது திருவடியால் உதையுண்ட இயமனார் தலைகீழாக வீழ்ந்து கிடக்கின்றார்.

வீழ்த்தி கிடக்கும் இயமனை ஒரு சிவபூதம் கயிறுகட்டி இழுத்து அப்புறப்படுத்தும் காட்சி காணற்கரியது.

இறைவனார் வலது பாகத்தில் ஸ்ரீமார்க்கண்டேயர் அருளுருவாய்க் காட்சியளிக்கிறார்.

இடது பக்கத்தில் பலாம்பிகை திருமகள் கலைமகளாக விளங்குகின்றார்.

இம்மூர்த்திக்கெதிரில் வடக்கு முகமாக யமனார் (உற்சவமூர்த்தி) எருமையுடன் ஆண்டவன் அருளை நாடிய வண்ணமாக ஆட்சித்திருக்கோலத்தில் காணப்படுகின்றார்.

இக்காலசங்கார மூர்த்திக்கு ஆண்டில் பன்னிரண்டுமுறை அபிஷேகம் நடைபெறுகிறது. இவர் சித்திரைப் பெருவிழாவில் ஆறாந்திருநாளன்று தான் வீதியுலாவிற்கு எழுந்தருளுவார்.

Tags:    

Similar News