ஆன்மிக களஞ்சியம்

குழந்தையைக் காப்பாற்ற சாயி செய்த அற்புதம்

Published On 2024-09-16 11:48 GMT   |   Update On 2024-09-16 11:48 GMT
  • அதில் தைரியமாக அமர்ந்தது குழந்தை. பிறகு மக்கள் அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார்கள்.
  • வெளியே வந்த குழந்தை தன்னை சாயிபாபா தாத்தா வந்து காப்பாற்றி தாங்கினார் என்று கூறியது.

பாபுகிர் வான்டிகர் என்பவருடைய மூன்று வயது பெண் குழந்தை ஒரு நாள் பொம்மையை வைத்து விளையாடும் பொழுது பொம்மை கிணற்றில் விழுந்தது.

அறியாமையால் எடுக்க முயற்சி செய்த போது, குழந்தை தவறி அதன் உள்ளே விழுந்தது.

விழும் சமயத்தில் ''சாயி சாயி'' என்று குரல் கொடுத்தவாறே கிணற்றில் விழுந்தது குழந்தை.

அதே சமயத்தில் சீரடியில் சாயிபாபா ஒரு தண்ணீர் தொட்டிக்குள் தம் கையை விட்டு அசைக்காமல் கொஞ்சம் கொஞ்சமாக மேலே எடுத்து கடைசியாக எதையோ கீழே வைத்தது போல் செய்தார்.

அங்கு ஊர் மக்கள் ஓடிச் சென்று பார்த்த சமயத்தில் குழந்தை கிணற்றுக்குள் அந்தரத்தில் யாரோ கைகளில் ஏந்திக் கொண்டிருப்பது போல் மிதந்து கொண்டிருந்தது.

காலி வாளியை கிணற்றுக்குள் அனுப்பினார்கள்.

அதில் தைரியமாக அமர்ந்தது குழந்தை. பிறகு மக்கள் அந்தக் குழந்தையைக் காப்பாற்றினார்கள்.

வெளியே வந்த குழந்தை தன்னை சாயிபாபா தாத்தா வந்து காப்பாற்றி தாங்கினார் என்று கூறியது.

சீரடி மக்கள் இந்த நிகழ்ச்சியை யாரோ கூறித் தெரிந்து கொள்ளவில்லை.

தாங்களே கண்களில் கண்டு சாட்சியானார்கள்.

சீரடியில் சில நிமிடங்கள் கழித்து தண்ணீர்த் தொட்டியில் என்ன செய்தீர்கள் என்று அருகில் இருந்தவர்கள் கேட்ட பொழுது நடந்த நிகழ்ச்சியை சாயி எடுத்துரைத்தார்.

அங்கும் இங்கும் மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

Similar News