ஆன்மிக களஞ்சியம்

மாயையை கடந்து வாழ்வின் அர்த்தத்தை உணருங்கள்!

Published On 2024-09-12 11:54 GMT   |   Update On 2024-09-12 11:54 GMT
  • எவ்வளவு பெரிய மேதையானாலும் அவனால் கர்மாவிலிருந்து தப்ப முடியாது.
  • எத்தனை கோடி பணம் வைத்திருப்பவனும் பசி, தாகம் இல்லாமல் வாழ முடியாது.

எவ்வளவு பெரிய மேதையானாலும் அவனால் கர்மாவிலிருந்து தப்ப முடியாது.

எத்தனை கோடி பணம் வைத்திருப்பவனும் பசி, தாகம் இல்லாமல் வாழ முடியாது.

முற்பிறப்பில் நீ செய்த கர்மாவின் பலனையே இப்போது நீ அனுபவிக்கிறாய். அதன் பலனால் தான் நீ மனித உடல் கொண்டு உள்ளாய்.

உலகில் மனிதன் மட்டும் ஏற்றத்தாழ்வுடன் வாழ்வதாய் நீ நினைத்தால் அது தவறு. பெரிய தவறு. எல்லா உயிர்களிடத்திலும் அதனதன் கர்மாவை பொறுத்து வேறுபாடு உள்ளது. நுட்பமாய் நோக்கினால் உனக்கு அது புரியும்.

நாய்களை பொதுவாக நோக்கினால் அவற்றிடையே உள்ள வேறுபாடு தெரியாது. அதே சமயம் உற்று நோக்கினால் உண்மை தெரியும். பணக்காரன் வீட்டு நாய் பஞ்சனையில் உலாவுகிறது. ஏழை வீட்டு நாய் குப்பை மேட்டில் தான் உழல்கிறது.

மனிதனுக்கு பகையாய் இருப்பவை காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாற்சரியம் என்னும் ஆறுந்தான். இவை அனைத்துமே மாயையின் தோற்றங்கள்.

கடலில் நீந்துபவன் ஒவ்வோர் அலையையும் கடந்து கரை சேர்வது போல, நல்வாழ்க்கையை பெற விரும்புபவன் இந்த ஆறு அலைகளை கடக்க வேண்டும்.

செல்வன் ஒருவன் பொன்னாபரணம் ஒன்றை வாங்கி அணிந்தால் ஏழை ஒருவன் அதை பார்த்து பொறாமை அடைகிறான்.

தானும் அது போன்ற ஆபரணம் ஒன்றை பெற வேண்டும் என்று ஆசைப்படுகிறான். இது லோபம், மாயையால் தோன்றும் ஒவ்வொன்றும் இப்படிப்பட்டவை தான்.

Similar News