ஆன்மிக களஞ்சியம்

நோய்களை நீக்கும் அபிமுகேஸ்வரர் கோவில்

Published On 2024-08-02 11:04 GMT   |   Update On 2024-08-02 11:04 GMT
  • இந்த திருக்கோவில் மகாமகக் குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது.
  • இறைவன் பெயர்அபிமுகேஸ்வரர், அம்பாள் பெயர் அமுதவள்ளி.

இந்த திருக்கோவில் மகாமகக் குளத்தின் கீழ்க்கரையில் அமைந்துள்ளது.

இறைவன் பெயர்அபிமுகேஸ்வரர், அம்பாள் பெயர் அமுதவள்ளி.

பிரளயத்தின் பொழுது சிவபெருமான் வேட உருவம் தாங்கி அமுதகலசத்தை உடைத்த பொழுது அந்தக் கும்பத்திலிருந்த தேங்காய் விழுந்த இடத்தில் ஒரு தென்னை மரம் தோன்றியது.

அந்தத் தென்னை மரத்திற்கு அடியில் சிவலிங்கமும் தோன்றியது.

இதனால் இத்தலத்திற்கு நாளிக்கேசர் என்று பெயர் சூட்டப்பட்டது (நாளி என்றால் சமஸ்கிருதத்தில் தென்னை மரத்தைக் குறிக்கும்).

இத்தலத்தில் இறைவன் முதலில் கிழக்கு நோக்கித்தான் இருந்தார்.

மகாமகக்குளத்தில் மகாமக தினத்தன்று நீராட நவ புண்ணிய நதிக் கன்னியர்கள் வந்த பொழுது, அவர்களுக்குத் தரிசனம் தர வேண்டி மேற்குத் திசையில் காட்சி கொடுத்தருளினார்.

இதனால்தான் இங்குள்ள இறைவன் பின்னர் அபிமுகேஸ்வரர் என்ற பெயர் பெற்றார்.

எந்த புண்ணிய தலத்திற்கும் சென்றும் தீராத குஷ்ட நோயை "சுமதி" என்ற பெண்ணுக்கு இங்குள்ள இறைவன் அந்த நோயைத் தீர்த்தார் என்பதால் அபிமுகேஸ்வரரை வணங்கினால் நோயெல்லாம் தீரும் என்ற நம்பிக்கை உண்டு.

இதே போல் ஊமையாக இருந்த இளவரசன் ஒருவன், மாசிமகத்தன்று இங்குள்ள குளத்தில் நீராடி அபிமுகேஸ்வரரை பிரார்த்தனை செய்ததால் நன்றாகப் பேசத் தொடங்கினார் என்று புராண வரலாறு உண்டு.

Tags:    

Similar News