ஆன்மிக களஞ்சியம்

பாதுகை பெற்ற பெண் சீடர்

Published On 2024-09-03 11:49 GMT   |   Update On 2024-09-03 11:49 GMT
  • பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருவரங்கத்திற்கு வந்தனர்.
  • அவர்களில் பலர் ராமானுஜர் சீடர்களாகி தொண்டு வாழ்க்கை மேற்கொண்டனர்.

ராமானுஜர் திருவரங்கம் திருக்கோவில் நிர்வாகத்தை ஏற்றார். பல்வேறு சீர்திருத்தங்களைச் செய்தார்.

அவருடைய முயற்சியால் வைணவம் தழைத்தது. அதனால் உடையவரின் புகழ் எங்கும் பரவியது.

பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் திருவரங்கத்திற்கு வந்தனர்.

அவர்களில் பலர் ராமானுஜர் சீடர்களாகி தொண்டு வாழ்க்கை மேற்கொண்டனர்.

அவ்வகையில் சுமதி என்ற பெண்ணும் உடையவரின் கைங்கர்யத்தில் ஈடுபட்டாள்.

அவன் கொங்கு நாட்டில் இருந்து வந்தவள் என்பதால், அவளை ராமானுஜர், "கொங்குப்பிராட்டி" என்று அழைத்தார்.

அனைத்தையும் மறந்து. ஆச்சார்ய சேவையில் ஈடுபட்டிருந்த கொங்குப் பிராட்டிக்கு, சொந்த ஊரில் இருந்து அழைப்பு வந்தது.

தவிர்க்க முடியாத குடும்பச் சூழலால் அவள் ஊருக்குத் திரும்ப வேண்டி இருந்தது.

கொங்குப்பிராட்டிக்கு, திருவரங்கத்தையும், ராமானுஜரையும் விட்டுப் பிரிந்து செல்ல மனம் இல்லை. எனினும் செல்ல வேண்டிய சூழ்நிலை.

கொங்குப்பிராட்டி தன் குருநாதரின் பாதுகைகளைக் கேட்டுப் பெற்றாள்.

பரதன் ராமபாதுகையை வைத்து வழிபட்டது போல், கொங்குப்பிராட்டி உடையவரின் பாதுகைகளை தன்னுடைய ஊரில் வைத்து வழிபட்டு வந்தாள்.

ஆசானின் திருவடிகளைப் பெற்று வழிபட்டாள்.

Tags:    

Similar News