ஆன்மிக களஞ்சியம்

ரிஷபம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய சனீஸ்வர பரிகாரங்கள்

Published On 2024-10-04 09:23 GMT   |   Update On 2024-10-04 09:23 GMT
  • விநாயகருக்கு இனிப்பு நிவேதனம் செய்து வழிபடவும்.
  • ஆஞ்சநேயருக்கு பழங்கள் நிவேதனம் செய்து சந்நிதியைச் சுற்றிவரவும்.

ரிஷபம் ராசியல் பிறந்தவர்கள் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது நல்லது.

முகம், வாய், கழுத்து இழுத்துக் கொண்டதுபோல் தோற்றமுள்ள மாற்றுத் திறனாளிக்கு அவ்வப்போது உணவுக்கும் மருந்துக்கும் உதவவும்.

அடுத்து யோக ஆஞ்சநேயரை வணங்கவும்.

ஆலயம், கல்வி கற்பிக்கும் இடம், நீதிமன்றம், பதிப்பகங்கள், பயண இடங்கள் இவற்றில் வேலை பார்க்கும் முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.

ரிஷபத்துக்குரிய தெய்வம் சுக்கிரனின் மகாலட்சுமி, எனவே உங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வெள்ளி அல்லது சனிக்கிழமைதோறும் பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் விளக்கேற்றவும்.

தாயாருக்கு நல்ல வெள்ளை நிறப் பூமாலை வாங்கி சாற்றவும்.

முடிந்தவர்கள் சந்தன நிறப் பட்டாடையால் தாயாரைக் குளிர்விக்கவும்.

சனிக்கிழமைகளில் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது.

விநாயகருக்கு இனிப்பு நிவேதனம் செய்து வழிபடவும்.

ஆஞ்சநேயருக்கு பழங்கள் நிவேதனம் செய்து சந்நிதியைச் சுற்றிவரவும்.

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கொள்ளிக்காடு சென்று வணங்கவும்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவ அஷ்டோத்திரம் சொல்லி வந்தால் கைமேல் பலன் உண்டு.

Similar News