ஆன்மிக களஞ்சியம்

சம்சார பந்தம்-யாருக்கும் விதிவிலக்கு அல்ல!

Published On 2024-09-12 11:53 GMT   |   Update On 2024-09-12 11:53 GMT
  • என்னை அண்டியவர்களின் அன்பை ஏற்கிறேன். மற்றவர்கள் மன நிறைவிற்காக அவர்கள் என்னை வணங்குவதை ஒப்புக்கொள்கிறேன்.
  • இவையெல்லாம் ஒரு வகையில் சம்சார பந்தங்களே.

வருவனவற்றை எல்லாம் எதிர்கொள்பவன் தான் துறவி. வந்த ஒரு நிகழ்ச்சிக்கு நொந்து வெந்து விரக்தியானவன் எப்படி துறவியாக முடியும்?

துறவு என்பது ஒரு கடமை. அதுபோல இல்லறம் என்பதும் ஒரு கடமை தான். அதில் ஒவ்வொருவரும் தம் கடமை சரிவர செய்ய வேண்டும்.

குழந்தை பிறப்பதும் உறவினர் இறப்பதும் முன் கர்மாவின் பலன். அதை உலகத்தை உருவாக்கிய பிரம்மாவினாலும் மாற்ற இயலாது.

சூரியனையும் சந்திரனையும் பார்த்து எப்போதும் தோன்றும் இடத்திலிருந்து இன்று இரண்டு அடி தள்ளி உதிக்க வேண்டும் என்று யாராவது கட்டளை இட முடியுமா?

பிறந்த ஒவ்வொருவரும் கர்மப்படி தமக்கு உரிய காலத்தில் மரணம் உண்டு என்பதை உணர வேண்டும்.

பெற வேண்டியதை உரிய காலத்தில் பெறுவது எப்படி தவிர்க்க முடியாதோ, அது போலவே இழக்க வேண்டியதையும் உரிய காலத்தில் இழந்து தான் ஆக வேண்டும்.

சம்சாரத்தை துறப்பதில் நிம்மதி உள்ளது என்று கூறுவதில் உண்மை இருக்கிறது என்றாலும், அதுவே முழுமையான உண்மையாகாது.

ஒவ்வொரு மனிதனும் பிறந்த பின் எப்படி வாழ்ந்தாலும் அவன் மறையும் வரையில் ஏதோ ஒரு வழியில் சம்சார பந்தத்திற்கு கட்டுப்பட்டவனாகவே இருக்கிறான். இருந்து தான் ஆக வேண்டும். இது தான் உலக நியதி.

நான் கூட ஒரு வகையில் சம்சார பந்தத்தில் சிக்கிக்கொண்டு தான் விழிக்கிறேன். என்னை நம்பியவர்களுக்கு துயரம் வரக்கூடாது என்று நினைக்கிறேன்.

என்னை அண்டியவர்களின் அன்பை ஏற்கிறேன். மற்றவர்கள் மன நிறைவிற்காக அவர்கள் என்னை வணங்குவதை ஒப்புக்கொள்கிறேன்.

இவையெல்லாம் ஒரு வகையில் சம்சார பந்தங்களே.

Similar News