ஆன்மிக களஞ்சியம்

சரித்திரம் போற்றும் சாவடி

Published On 2024-09-12 11:46 GMT   |   Update On 2024-09-12 11:46 GMT
  • சாவடியில் நுழைந்தவுடன் வலது பக்கம் உள்ள கம்பிகளுக்கு பின்னே சாயிபாபா ஓய்வு எடுத்துக்கொள்வது வழக்கம்.
  • இங்கும் பக்தர்கள் ஏராளமாக வந்து பாபாவை வணங்கி சென்றனர்.

சீரடி தலத்தில் இந்த சாவடிக்கு மசூதியிலிருந்து பாபா ஒரு நாள் விட்டு ஒரு நாள் செல்வது வழக்கம். 16.12.1910 முதல் பக்தர்கள் இங்கு பாபாவுக்கு காலை ஆரத்தியும், இரவு ஆரத்தியும் செய்து வழிபடத் தொடங்கினார்கள்.

சாவடியில் நுழைந்தவுடன் வலது பக்கம் உள்ள கம்பிகளுக்கு பின்னே சாயிபாபா ஓய்வு எடுத்துக்கொள்வது வழக்கம்.

இடப்பக்கத்தில் ஒரு நாற்காலி உள்ளது. ஒரு சமயம் பாபா தீவிரமான நோயால் பீடிக்கப்பட்டிருந்த போது ஒரு பக்தர் அந்த சக்கர நாற்காலியை பாபாவுக்கு அளித்தார்.

இங்கும் பக்தர்கள் ஏராளமாக வந்து பாபாவை வணங்கி சென்றனர்.

தினந்தோறும் காலை, பகல், மாலை நேரங்களில் வந்து இங்குள்ள வேப்ப மரத்தடியிலும், அத்தி மரத்தடியிலும் நீண்ட நேரம் பாபா உட்காருவது வழக்கம்.

இம்மரத்தடியில் ஒரு குழியை தோண்டி எண்ணெய் விளக்கு (அகண்ட தீபம்) ஏற்றி, இங்கு உள்ள அரச மரம் காய்ந்து பட்டு போன போது அதை பாபா உயிர்ப்பித்து அங்கு நவக்கிரஹ பிரதிஷ்டை செய்தார்.

லெண்டித் தோட்டத்தின் உள்ளே நுழையும் போது எதிரே தெரியும் கிணற்றிலிருந்து தான் பாபா தான் வளர்த்த செடிகளுக்கு நீர் கொணர்ந்து ஊற்றுவார்.

Similar News