ஆன்மிக களஞ்சியம்

சிவராத்திரி கதை-மகா காந்தன், காந்தன்

Published On 2024-09-10 12:19 GMT   |   Update On 2024-09-10 12:19 GMT
  • நந்திகேஸ்வரரின் வேலையாட்கள் மகா காந்தன், காந்தன்.
  • அவர்களிடம் சிவபூஜைக்காக பூலோகம் சென்று கொன்றை மலர்களை பறித்துவர சொன்னார் நந்தி.

நந்திகேஸ்வரரின் வேலையாட்கள் மகா காந்தன், காந்தன்.

அவர்களிடம் சிவபூஜைக்காக பூலோகம் சென்று கொன்றை மலர்களை பறித்துவர சொன்னார் நந்தி.

பூலோகம் வந்த இருவரும் வேலையை மறந்து நந்தவன நிழலில் படுத்து தூங்கி விட்டனர்.

நந்திதேவருக்கு கோபம் வந்தது.

ஒருவனை வேடனாகவும், இன்னொருவனை பூனையாகவும் மாற்ற சாபம் கொடுத்தார்.

இருவரும் அப்படியே மாறி வில்லிவாக்கம் என்ற கிராமத்தை அடைந்தனர்.

பூனையை ஒரு வேடன் துரத்தினான்.

பயந்து ஓடிய பூனை அருகிலிருந்த சிவன் கோவிலுக்குள் புகுந்து லிங்கத்தை கட்டிக் கொண்டது. வேடனின் அம்பு சிவலிங்கம் மீது பட்டு ரத்தம் கொட்டியது.

பூனை பயந்து தீர்த்த குளத்துக்கு ஓடியது. சிவனை காயப்படுத்தி விட்டோமே என்று கவலை அடைந்த வேடனும் தீர்த்தத்தில் நீராடி சிவனிடம் மன்னிப்பு கேட்க வந்தான்.

ஒரே சமயத்தில் வேடன் ஒரு பக்கம், பூனை ஒரு பக்கம் குளத்தில் மூழ்கி எழுந்திருக்க... இருவரும் மீண்டும் மகாகாந்தன், காந்தன் ஆக மாறினார்கள்.

பூ, பழங்களை படைத்து ஈசனை வணங்கினார்கள்.

இது நடந்தது ஒரு சிவராத்திரி தினத்திலாகும். எனவே சிவராத்திரி கதைகளில் இதுவும் இடம் பெற்றுள்ளது.

Similar News