ஆன்மிக களஞ்சியம்
null

ஸ்ரீசாயிபாபா விரத முறைகள்

Published On 2024-09-13 12:12 GMT   |   Update On 2024-09-16 05:27 GMT
  • 9 வியாழக்கிழமை களும் முடிந்தால் சாயிபாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும்.
  • முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி, சிரத்தையுடன் செய்யவும்.

1. பாபாவை குருவாக ஏற்று வழிபட தொடங்கிய பிறகு, குரு (வியாழன்) என்பதால் வியாழக்கிழமை விரதம் இருப்பது வழக்கத்துக்கு வந்தது. இந்த விரதத்தை ஆண், பெண், குழந்தைகள் யார் வேண்டுமானாலும் செய்யலாம்.

2. இந்த விரதத்தை ஜாதி, மத பேதமின்றி எந்த சார்பினரும் செய்யலாம்.

3. இந்த விரதம் அற்புத பலன்கள் தர வல்லது. 9 வியாழக்கிழமைகள் விதிமுறைப்படி விரதம் இருந்தால் நிச்சயமாக விரும்பிய எண்ணங்கள் நிறைவேறும்.

4. விரதத்தை எந்த ஒரு வியாழக்கிழமை யானாலும், சாயி நாமத்தை எண்ணி ஆரம்பிக்கலாம். எந்த காரியத்திற்காக ஆரம்பிக்கிறோமோ, அதை தூய மனதில் சாயி பாபாவை எண்ணிப் பிரார்த்தித்துக் கொள்ள வேண்டும்.

5. காலை அல்லது மாலையில் சாயி பாபாவின் போட்டோவிற்கு பூஜை செய்ய வேண்டும். ஒரு தூய ஆசனத்தில் அல்லது பலகையில் மஞ்சள் துணியை விரித்து அதன்மேல் சாயிபாபா போட்டோவை வைத்து தூய நீரால், துணியால் துடைத்து, சந்தனம், குங்குமம் வைத்து திலகம் இட வேண்டும். மஞ்சள் நிற மலர்கள் அல்லது மாலை அணிவிக்கவும். ஊதுபத்தியும், தீபமும் ஏற்றி சாயி விரத கதையைப் படிக்கவும். சாயிபாபாவை ஸ்மரணை செய்யவும், நைவேத்தியம் வைத்து (பழங்கள், இனிப்பு, கற்கண்டு எதுவானாலும்) பிரசாதத்தை விநியோகிக்கவும்.

6. இந்த விரதத்தை பழ, திரவிய ஆகாரங்கள் (பால், டீ, காபி, பழங்கள், இனிப்புகள்) உட்கொண்டு செய்யவும். அப்படி நாள் முழுவதும் செய்ய முடியாதவர்கள் ஏதாவது ஒரு வேளை (மதியமோ, இரவோ) உணவு அருந்தலாம். நாள் முழுவதும் வெறும் வயிற்றோடு பட்டினியாக இந்த விரதம் செய்யவே கூடாது.

7. 9 வியாழக்கிழமை களும் முடிந்தால் சாயிபாபா கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும். முடியாதவர்கள் (கோவில் அருகில் இல்லை என்றால்) வீட்டிலேயே சாயிபாபாவின் பூஜையை பக்தி, சிரத்தையுடன் செய்யவும்.

8. வெளியூர் செல்வதானாலும் இந்த விரதம் கடைப்பிடிக்கலாம்.

9. விரதத்தின் 9 வாரங்களில் பெண்களுக்கு மாத விலக்கு அல்லது இன்ன பிற காரணங்களாலே விரதம் செய்ய முடியவில்லை என்றால் அந்த வியாழக்கிழமையை கணக்கில் எடுத்து கொள்ளாமல் இன்னொரு வியாழக்கிழமை விரதம் இருந்து 9 வியாழக்கிழமைகள் நிறைவு செய்யவும்.

Similar News