ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ சரபேஸ்வரரின் உருவ விளக்கம்

Published On 2024-08-12 10:17 GMT   |   Update On 2024-08-12 10:17 GMT
  • நரசிம்மரின் அவதாரம் தலையையும், மனித உடலையும் கொண்டது.
  • ஆனால் சரபேஸ்வர அவதாரமோ யாளி, மனிதன், பக்ஷி என்னும் மூன்று உருவத்தினையும் கலந்ததாகும்.

நரசிம்மரின் அவதாரம் தலையையும், மனித உடலையும் கொண்டது.

ஆனால் சரபேஸ்வர அவதாரமோ யாளி, மனிதன், பக்ஷி என்னும் மூன்று உருவத்தினையும் கலந்ததாகும்.

யாளி என்பது விலங்குகளில் மிக சக்தி வாய்ந்த மிருகமாகும்.

பக்ஷிகளில் சரப பக்ஷி மிகவும் சக்தி வாய்ந்ததாகும்.

அதாவது மனித தன்மையினையும், மிருக தன்மையினையும் ஒருங்கே அமைய பெற்ற தெய்வ வடிவே சரபேஸ்வர உருவமாகும்.

சரபேஸ்வரரின் உடல் சிலம்பு அணிந்த திருவடிகளாய் கால்கள் எட்டு, மான், மனு, சர்ப்பம், அக்னி என்னும் நான்கினையும் தாங்கி நிற்கும் திருக்கரங்கள் நான்கு, சந்திரன், சூரியன், அக்னி என்னும் மூன்றினையும் குணமாகக் கொண்ட கண்கள் மூன்று, வெளியில் நீண்டு தொங்கிக்கொண்டிருக்கும் நாக்கு, பக்ஷிகளின் தலைவனாகிய கருடனின் மூக்கினை போன்று நீண்டிருக்கும் மூக்கு, கொடிய அம்பினை போன்ற கூர்மையுடைய நகங்கள், அதிபயங்கரமான கோர பற்கள், இரு இறக்கைகளாக பிரத்தியங்கிரா தேவியும், துர்கா சூலினியும், இரு தொடைகளாக ரோக தேவதையும், எமனும், வயிற்று பகுதியாக வட முகாக்னி, கொண்டை முடியில் பிறை நிலா ஆகியவற்றை கொண்டது.

மான்:

மான், யாருக்கும் எவ்விதக் கெடுதலும் நினையாமல் ஸாத்வீகமாக இருப்பதை குறிப்பதாகும்.

ஸர்ப்பம்:

ஸர்ப்பம், குண்டலினீ சக்தியை ஏற்படுத்துவதாகும்.

மழூ:

மழு, "நான்" என்ற அகந்தையை அழிப்பதாகும்.

அக்னி:

அக்னி, ஞானத்தை அளிப்பதாகும்.

Tags:    

Similar News