ஆன்மிக களஞ்சியம்

திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிடைக்க தேவியை வழிபடுங்கள்!

Published On 2024-08-14 12:00 GMT   |   Update On 2024-08-14 12:01 GMT
  • மகா பிரத்தியங்கிராதேவி அன்னையை பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நாகதோஷம் நீங்கும்.
  • கால பைரவரை புனுகு பூசி அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

தூத்துக்குடி மகா பிரத்தியங்கிரா தேவியை வியாழக்கிழமை காலை சந்தனக் காப்பு அலங்காரத்துடன், எள்ளுப்பூ, செவ்வரளி மாலை அணிவித்து நெய் தீபம் ஏற்றி வணங்கினால் புத்திர பாக்கியம் கிட்டும்.

வெள்ளிக்கிழமை அன்னையை தாமரை மலர் 'அணிவித்து சந்தன காப்பு அலங்காரம் செய்து வழிபட்டால் திருமணத்தடை நீங்கி நல்ல வரன் கிடைக்கும்.

மகா பிரத்தியங்கிராதேவி அன்னையை பாலாபிஷேகம் செய்து வணங்கினால் நாகதோஷம் நீங்கும்.

கால பைரவரை புனுகு பூசி அரளி, தாமரை மலர் சூட்டி வணங்கினால், திருமணத் தடை நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும்.

மாதம் தோறும் அஷ்டமி, அமாவாசை பவுர்ணமி நாட்களில் சிறப்பு அபிஷேக, ஆராதனைகளுடன் கூடிய வழிபாடு நடத்தப்படுகிறது.

ஆடி, தைத்திருநாள், தை அமாவாசை, தமிழ் வருடப்பிறப்பு, சித்ரா பவுர்ணமி நாட்களில் சிறப்பு யாகத்துடன் கூடிய வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

ஆண்டு தோறும் தமிழ் வருடப் பிறப்பான சித்திரை ஒன்று அன்று மகா பிரத்தியங்கிரா தேவிக்கு திருவிழா நடக்கிறது.

உலகம் முழுவதும் வாழ்ந்து வரும் மக்கள் நோய்,-நொடியின்றி நலமாக வாழ வேண்டியும், நாடு முழுவதும் நல்ல மழை பெய்து பசுமை வளம் சிறக்க வேண்டியும் மகா பிரத்தியங்கிரா தேவிக்கு உலகிலேயே முதல் முறையாக 2013 கிலோ மிளகாய் வற்றல் யாகம் நடத்தப்பட்டது.

இதுபோன்றே மிளகாய் வற்றல் யாகம், பச்சை மிளகாய் யாகம், பாகற்காய் யாகம், எலுமிச்சை பழ யாகம் போன்ற சிறப்பு யாகங்கள் ஆண்டு தோறும் மிகச் சிறப்பாக கோலாகலமாக நடத்தப்பட்டு வருகின்றன.

வாழ்வில் மனத்துன்பம் போக்குவதுடன் எதிரிகளின் ஏவல்களை ஒழித்து, வேண்டும் வரத்துடன் நல்வாழ்வும் தரும் சித்தர் நகர் மகா பிரத்தியங்கிராதேவி மகா காலபைரவரை நாமும் வணங்கி நல்வாழ்வு பெற்றிட இன்றே ஆலயம் சென்று தரிசித்திடுவோம்.

Tags:    

Similar News