ஆன்மிக களஞ்சியம்

சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய தலங்கள்-திருவைகாவூர்

Published On 2024-09-10 12:11 GMT   |   Update On 2024-09-10 12:11 GMT
  • திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.
  • இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம்.

திருவைகாவூர் வில்வவனேசுவரர் கோயில் சம்பந்தர் பாடல் பெற்ற சிவாலயமாகும்.

இது தஞ்சை மாவட்டத்தில் அமைந்துள்ளது. சிவராத்திரிக்குச் சிறப்புடைய தலம்.

சிவராத்திரி நாளில் புலிக்குப் பயந்த வேடன் வில்வ மரத்திலிருந்து தூங்காமல் வில்வத்தைப் பறித்துப்போட இறைவன் காலையில் தோன்றி அருள்புரிந்த தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்).

சுவாமி மலையில் இருந்து ஏழு கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

வேடன் ஒருவன் சிவலோகம் செல்ல அதைத் தடுத்தான் எமன்.

தம் அடியாரின் உயிரைக் கவர வந்ததை அறிந்து சிவபெருமான் தட்சிணாமூர்த்தி வடிவத்தில் கையில் கோல் கொண்டு விரட்டினாராம்.

எமனை அதன் பின்னர் வேடன் செய்த சிவபூஜையின் மகிமையும் சிவராத்திரி மகிமையும் அவனுக்குச் சொல்லப்பட்டதாம்.

Similar News