ஆன்மிக களஞ்சியம்

சிவராத்திரியில் தரிசிக்க வேண்டிய தலங்கள்-திருவிடை மருதூர்

Published On 2024-09-10 12:02 GMT   |   Update On 2024-09-10 12:02 GMT
  • அப்போது சிவாம்சமாக பதினொரு கோடி ருத் திரர்கள் ஒன்று சேர்ந்து சிவபெருமானைப் போற்றித் துதித்தனர்.
  • அவர்கள் அமைத்து வழிபட்ட லிங்க மூர்த்தமே திருவிடை மருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி.

கும்பகோணம் அருகில் உள்ள தலம்.

ஒருமுறை உமையம்மை கயிலையை விட்டு நீங்க எங்கும் இருள்சூழ்ந்து உலகம் தவித்தது.

அப்போது சிவாம்சமாக பதினொரு கோடி ருத் திரர்கள் ஒன்று சேர்ந்து சிவபெருமானைப் போற்றித் துதித்தனர்.

அவர்கள் அமைத்து வழிபட்ட லிங்க மூர்த்தமே திருவிடை மருதூர் ஸ்ரீமகாலிங்க சுவாமி.

அவர்களின் பிரார்த்தனையை ஏற்று ஜோதி ஸ்வருபமாக வெளிப்பட்டாராம் ஈசன்.

அவரின் ஒளியால் உலகத்து உயிர்கள் இன்புற்றன.

இப்படி ருத்திரர்கள் அருள் பெற்றது சிவராத்திரி தினத்தில்தான்.

சிவராத்திரியில் இங்கு ஈசனை தரிசிப்போர் ருத்ரபதம் பெறுவார்கள்.

Similar News