ஆன்மிக களஞ்சியம்

வாராகி மாலை-பக்தியின் உச்சம்

Published On 2024-10-25 11:45 GMT   |   Update On 2024-10-25 11:46 GMT
  • தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி.
  • எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.

மெய்சிறந்தார் பணியார் மனம்காயம் மிக வெகுண்டு

கை சிரத்து ஏந்திப் ப-லால் நீணம் நாறக் கடித்து உதறி

வச்சிரத் தந்த முகபணியால் குத்தி வாய் கடித்து

பச்சிரத்தம் குடிப்பாளே வாராகி பகைஞரையே.

பொருள்: தீமையை பொறுக்காத சினம் கொண்டவள் ஸ்ரீவாராகி.

அதுவும் தூயவர்களை அவளிடம் ஆழ்ந்த பக்தி கொண்டவர்களை தீயவர்கள் துன்புறுத்தினால் அன்னை கோபம் கொள்கிறாள்.

அந்த பகைவர் கடுமையாக தண்டிக்கப்படுகிறார்.

அவர்கள் மட்டுமல்ல, உண்மையான பக்தியின்றி பணிபவர்களும் இந்த தண்டனையை ஏற்க வேண்டியதுதான்.

பகைவர் உடலை தன் கூரிய நகங்களால் கிழித்து கூரிய கொம்புகளாக குத்தி குருதி குடிப்பாள்.

எனவே வாராகி வழிபாடு மிகவும் கட்டுப்பாடு உரியது. விளையாட்டல்ல என எச்சரிக்கப்படுகிறது.

பயன்பாடு: எதிரிகள் தொல்லை நீங்க பாடுவது நன்மை தரும்.

Similar News