ஆன்மிகம்
வால்பாறை பத்தாம்பாத்தி புனித ஜெபமாலை மாதா தேர்த்திருவிழா
வால்பாறை பத்தாம்பாத்தி புனித ஜெபமாலை மாதா தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
வால்பாறை திரு இருதய ஆலயத்தின் கிளை பங்கான சிங்கோனா பகுதியில் அமைந்துள்ள பத்தாம்பாத்தி புனிதஜெபமாலை மாதா தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை முன்னிட்டு வால்பாறை திருஇருதயஆலய பங்கு குருக்கள் வின்செண்ட் பால்ராஜ், லாரன்ஸ் தலைமையில் கூட்டு பாடல் திருப்பலி மற்றும் சிறப்பு ஜெபமாலை வழிபாடுகளும் நடத்தப்பட்டு தேர்த்திருவிழா கொடியேற்றி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து வருகின்ற 22-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் ஜெபமாலை வழிபாடுகள் நடைபெறுகிறது.
அதனை தொடர்ந்து 22-ந் தேதி சிங்கோனா பகுதியிலிருந்து பத்தாம் பாத்தி வரை ஜெபமாலை மாதா தேர்பவனி நடைபெறுகிறது. பின்னர் கூட்டுபாடல் திருப்பலியும் சிறப்பு அன்பின் விருந்தும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பங்கு குருக்கள் பத்தாம் பாத்தி பங்குமக்கள் செய்து வருகின்றனர்.