ஆன்மிகம்

புதன் பரிகாரத்திற்கு சிறந்த தலம்

Published On 2017-01-25 03:03 GMT   |   Update On 2017-01-25 03:03 GMT
ஜாதகரீதியாக புதன் நீச்சமாக இருப்பவர்கள், சென்னை போரூருக்கு அருகில் உள்ள சுந்தரேஸ்வரர் திருக்கோவிலுக்கு வந்து வழிபாடு செய்து புதனின் அருளை பெற்று மகிழலாம்.
சென்னை போரூருக்கு அருகில் உள்ளது கோவூர் என்ற திருத்தலம். இங்கு சுந்தரேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவனின் திருநாமம் சுந்தரேஸ்வரர், அம்பாளின் திருநாமம் சவுந்தராம்பிகை. கி.பி. 965-ம் ஆண்டில் சுந்தர சோழன் என்பவனால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக குறிப்புகள் உள்ளன. இங்குள்ள இறைவனை காமதேனு வழிபட்டதால், இத்தலம் ‘கோவூர்’ என்று வழங்கப்படுகிறது. இத்தலமே சென்னையில் இருக்கும் புதனுக்குரிய பரிகார தலமாகும்.

பஞ்ச ரத்ன கீர்த்தனை பாடல் பெற்ற தலங்களில் இத்தலமும் ஒன்று. இங்கு ஒவ்வொரு புதன்கிழமையும் நடைபெறும், மகாவில்வ இலை பூஜை விசேஷமானதாகும். சீதையை தேடி வந்த ராமன், இத்தல இறைவனை 48 நாள் விரதம் இருந்து வழிபட்ட பிறகே ராமேஸ்வரம் புறப்பட்டதாக தல புராணம் தெரிவிக்கிறது. ஜாதகரீதியாக புதன் நீச்சமாக இருப்பவர்கள், இங்கே வழிபாடு செய்து புதனின் அருளை பெற்று மகிழலாம். இத்தலத்தில் மகாவில்வ மரமானது ஸ்தல விருட்சமாக உள்ளது.

Similar News