ஆன்மிகம்

மருதமலையில் உள்ள முக்கிய தீர்த்தங்கள்

Published On 2016-09-28 08:06 GMT   |   Update On 2016-09-28 08:07 GMT
மருதமலையில் உள்ள முக்கிய தீர்த்தங்கள் என்னவென்று கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்றனுள் மூன்றாவதாக உள்ளது தீர்த்தம். நம் நாட்டில் விளங்கும் புனிதமுடைய பற்பல கிணறு, குளம், ஆறு, கடற்கரை இவையாவும் சிமயத்தன்மை பெற்றிருப்பதால் நீராடியோரது உடற்பிணியையும், பிறவிப்பிணியையும் அவை போக்குகின்றன. 

இதனை திருநாவுக்கரசர், ‘சென்ற நாடு தீர்த்தங்கள் ஆனார் தாமே’ என்கிறார். இத்தலத்தின் தீர்த்தங்கள் அனைத்தும் சிறப்பு வாய்ந்தவை. அவை....மருததீர்த்தம், கன்னி தீர்த்தம், கந்த தீர்த்தம் என்னும் தெய்வத்தன்மை மிக்க இம்மூன்று தீர்த்தங்கள் உள்ளன. இத்தீர்த்தங்களில் நீராடுவோர்க்குச் செல்வங்கள் பெருகும் எனவும், உடற்பிணி நீங்குமெனவும் திருத்துடிசைப் புராணம் கூறுகிறது.

Similar News