ஆன்மிகம்

சேலம் களரம்பட்டியில் கோவில்விழா: பெண்கள் பால்குட ஊர்வலம்

Published On 2017-02-01 03:34 GMT   |   Update On 2017-02-01 03:34 GMT
சேலம் களரம்பட்டி மகா மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவில் விழாவில் பெண்கள் பால்குடம் எடுத்து கோவிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர்.
சேலம் களரம்பட்டி மகா மாரியம்மன் மற்றும் காளியம்மன் கோவிலில் 89-ம் ஆண்டு தைப்பெருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. கம்பம் நடுதல் மற்றும் அம்மனுக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் பெண்கள் பால்குடம் எடுத்து கோவிலை நோக்கி ஊர்வலமாக சென்றனர். களரம்பட்டி தேவி தியேட்டர் அருகில் உள்ள விநாயகர் கோவிலில் ஊர்வலம் தொடங்கி மகா மாரியம்மன் கோவிலை வந்தடைந்தது.

பின்னர் அம்மனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இரவு சக்தி அழைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) காலை பொங்கல் வைபவம் மற்றும் கிடா வெட்டுதலும், மாலை பக்தர்கள் தீக்குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

விழா ஏற்பாடுகளை கோவில் விழாக்கமிட்டியினர் செய்து வருகிறார்கள்.

Similar News