ஆன்மிகம்
செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்ததையும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதையும் படத்தில் காணலாம்.

செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்: திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

Published On 2017-02-06 05:43 GMT   |   Update On 2017-02-06 05:43 GMT
விழுப்புரம் அருகே ஆயந்தூர் அரசமரத்தடி செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
விழுப்புரம் அருகே ஆயந்தூர் கிராமத்தில் பிரசித்தி அரசமரத்தடி செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் திருப்பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி கோவில் அருகே அமைக்கப்பட்டிருந்த யாக சாலையில் காலை 9 மணிக்கு சிறப்பு ஹோமம் நடைபெற்றது.

பின்னர் தத்துவார்ச்சனை, நாடிசந்தனம், பூர்ணாஹீதி மற்றும் தீபாராதனை நடந்தது. இதையடுத்து யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு சென்று 10 மணிக்கு கோவில் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் வளாகத்தில் உள்ள தர்மசாஸ்தா, அய்யப்பன், பாலமுருகன், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை, சரஸ்வதி ஆகிய சாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

பின்னர் பகல் 12 மணிக்கு விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இரவு 8 மணிக்கு சாமி வீதியுலா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

Similar News