ஆன்மிகம்

சக்கரவாகேஸ்வரர் கோவில் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

Published On 2017-04-01 08:40 GMT   |   Update On 2017-04-01 08:40 GMT
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையில் சக்கரவாகேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சப்தஸ்தான விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி அலங்கரிக்கபட்ட தேவநாயகி அம்மன் சக்கரவாகேஸ்வரருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

விழாவில் சுவாமிமலை சுவாமிநாதர் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஏழூர் பல்லக்கு புறப்பாடு 11-ந் தேதி(செவ்வாய்க் கிழமை) நடக்கிறது. 12-ந் தேதி(புதன்கிழமை) சாமிக்கு பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடக்கிறது.

Similar News