ஆன்மிகம்

கோவில் பலி பீடம் உணர்த்தும் உண்மை

Published On 2017-09-07 10:17 GMT   |   Update On 2017-09-07 10:17 GMT
கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும் தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.
கோயிலில் உள்ள பலி பீடம் என்பது, உயிர் பலி கொடுக்கப்படும் இடமல்ல. நம் மனதுள் நமக்கு தெரியாது ஒளிந்திருக்கும்.....

காமம்,
ஆசை,
குரோதம் (சினம்),
லோபம் (கடும்பற்று),
மோகம் (கற்பு நெறி பிறழ்வு),
பேராசை,
மதம் (உயர்வு தாழ்வு மனப்பான்மை),
மாச்சர்யம் (வஞ்சம்),

எனும் எட்டு தீய குணங்களையும் பலி கொடுக்க உறுதி செய்துக்கொள்ளுமிடம்.



வெறுமனே வீழ்ந்து வணங்குவதால் நலன் ஒன்றும் வந்துவிடாது. வீழ்ந்து வணங்கும்போது தனது கீழான இயல்புகளெல்லாம் அந்த இடத்திலே பலி கொடுக்க வேண்டும். மனிதனிடத்துள்ள கீழ்மையெல்லாம் அங்கு பலியிட வேண்டும். மனதின் ஆணவம் பலியிடப்படுகிறது. மேலான எண்ணங்கள் மட்டும் எஞ்சியிருக்க வேண்டும்.

பெண்கள் செய்யும் பஞ்சாங்க நமஸ்காரத்தில் தலை, கையிரண்டு, முழந்தாள் இரண்டு என ஐந்து அங்கங்களே நிலத்தில் படியக்கூடியதாக இருக்கவேண்டும்.

அஷ்டாங்க நமஸ்காரம் என்பது தலை, கையிண்டு, மோவாய், செவிகள் இரண்டு, மார்பு, முழந்தாள்கள் இரண்டு என்பதாகும். (மோவாய் என்பது மூக்கும் வாயும் சேர்ந்தது)

Similar News