ஆன்மிகம்
மஞ்சமலை அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழாவில் ஊர்வலமாக வந்த பக்தர்களை படத்தில் காணலாம்.

மஞ்சமலை அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா

Published On 2018-06-05 06:06 GMT   |   Update On 2018-06-05 06:06 GMT
பாலமேடு அருகே மஞ்சமலை அய்யனார் கோவில் குதிரை எடுப்பு திருவிழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டார்.
பாலமேடு அருகே வலையபட்டியில் உள்ளது பிரசித்தி பெற்ற மஞ்சமலை அய்யனார்சாமி கோவில். இங்கு குதிரை எடுப்பு திருவிழா நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், தேனி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மற்றும் சென்னை போன்ற பகுதிகளிலிருந்து பக்தர்கள் நேர்த்திகடனாக குதிரைகள், காளைகள், பசுக்கள், திருபாதங்கள், திருமண தம்பந்திகள், குழந்தைகள், கோழிகள் உள்ளிட்ட பல்வேறு உருவ வர்ண சிலைகளை எடுத்து வந்தனர்.

முன்னதாக இந்த சிலைகள் அரசம்பட்டி மந்தையில் வேட்டி, துண்டுகள், வண்ண மாலைகளால் அலங்கரிக்கபட்டு வைத்திருந்தது. அத்துடன் மஞ்சமலை அய்யனார், ஈரடி கருப்புசாமி மற்றும் கன்னிமார் உள்ளிட்ட உபதெய்வங்களின் சிலைகளும் தயார் நிலையில் வைக்கபட்டிருந்தன. பின்னர் வாணவேடிக்கையுடன் மேளதாளம் முழங்க சிலைகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு வலையபட்டி மந்தை திடலில் வைக்கப்பட்டன.

அங்கு சிலைகளின் கண்கள் திறக்கப்பட்டு விசேஷ பூஜைகள் நடத்தப்பட்டன. அதன் பின்பு பரிவாரங்களுடன் சாமி, குதிரைகள் உள்ளிட்ட சிலைகள் அந்தந்த பகுதி கோவில் இருப்பிடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டன. திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். 
Tags:    

Similar News