ஆன்மிகம்

அதிசயம் நிறைந்த ஆலயங்கள்

Published On 2018-06-29 09:36 GMT   |   Update On 2018-06-29 09:36 GMT
இந்து கோவில்களில் பல்வேறு அதிசயங்கள் நிறைந்துள்ளது. இந்த வகையில் சில அதிசயம் நிறைந்த கோவில்களை பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ளது கோட்டையூர். இங்குள்ள நூற்று ஒன்று சாமி மலை மீது உள்ள குகையில் ஒரு அடி உயரம் கொண்ட கல்லால் ஆன அகல் விளக்கு இருக்கிறது. இதில் இளநீர் விட்டு தீபமேற்றினால் அது பிரகாசமாக எரியும் அதிசயத்தைக் காணலாம்.

ஜெயங்கொண்டத்தில் உள்ள கங்கை கொண்ட சோழபுரம் கோவிலில் உள்ள கிணற்றிற்கு அருகில் ஒரு சிங்கத்தின் சிற்பம் இருக்கும். சிங்கத்தின் வாய் பகுதியில் ஒரு கதவு தென்படும். அதன் வழியாக கீழே இறங்கினால் கிணற்றில் குளிக்கலாம். ஆனால் மேலேயிருந்து பார்த்தால் நாம் குளிப்பது தெரியாது.

திருநல்லூர் கல்யாணசுந்தரேஸ்வரர் (பஞ்சவர்ணேஸ்வரர்) திருக்கோவிலில், 6 நாழிகைக்கு ஒரு முறை சிவலிங்கம் வர்ணம் மாறுகிறது.

திருக்கழுக்குன்றத்தின் தெப்பக்குளத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்கு தோன்றுகிறது. சிவனுக்கு படைக்கப்பட்ட பிரசாதத்தை கழுகு உண்ணும் அதிசயத்தையும் இங்கே பார்க்கலாம்.

திருச்செந்தூரில் சூரனை வதம் செய்ததும், தாமரை மலரைக் கொண்டு சிவபூஜை செய்தார், முருகப்பெருமான். அதை உணர்த்தும் வகையில் மூலவர் சிலையின் வலது கையில் தாமரை மலர் உள்ளது. 
Tags:    

Similar News