ஆன்மிக களஞ்சியம்

பிரம்மன் நடத்திய புரட்டாசி பிரம்மோற்சவம்

Published On 2024-09-23 11:39 GMT   |   Update On 2024-09-23 11:39 GMT
  • “திருமலையில் ஸ்ரீவேங்கடேசுவரருக்கு பிறப்பு கடவுளான பிரமன்தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார்.
  • பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம் ஆகையால் இது பிரம்மோத்சவம் என்று அழைக்கப்பட்டது.

புரட்டாசி திருவோணம், திருவேங்கடவனின் பிறந்த நாளாகத் தொன்று தொட்டு கருதப்பட்டு வருகிறது.

இந்த திருவோண தினத்திற்கு முன்பாக ஒன்பது நாட்கள் நடைபெறும் மிகப்பெரிய திருவிழாவில் காலை, மாலை இரண்டு வேளைகளிலும் பல வாகனங்களில் விசேஷ அலங்காரங்களுடன் உற்சவமூர்த்தியான திருமலை அப்பன் அமர்ந்து திருவீதி வலம் வருகிறார்.

"திருமலையில் ஸ்ரீவேங்கடேசுவரருக்கு பிறப்பு கடவுளான பிரமன்தானே முன்னின்று இவ்விழாவை நடத்தி வைத்தார்.

பிரம்மனால் நடத்தப்பட்ட உற்சவம் ஆகையால் இது பிரம்மோத்சவம் என்று அழைக்கப்பட்டது.

கி.பி.966 ம் ஆண்டில் ஒருமுறை பிரம்மன் திருவிழா நடைபெற்று வந்ததாகவும், அதன்பிறகு புரட்டாசியில் ஒன்றும், மார்கழியில் ஒன்றுமாக இரண்டு தடவை நடத்தப்பட்டன என்றும் கல்வெட்டு தெரிவிக்கிறது.

திருமலையின் மூன்றாம் சுற்றுச்சுவற்றிலுள்ள ஒரு கல்வெட்டில் 1551-ம் வருடத்தில் பதினொரு பிரம்மோத்சவம் நடைபெற்றதாகத் தெரிவிக்கிறது. கொடியேற்றத்துடன் பிரம்ம உற்சவம் தொடங்கும்.

பிரம்மோத்சவத்தில் ஊஞ்சல் சேவையைக் காண்போருக்கு இம்மையிலும், மறுமையிலும் கோடான கோடி இன்பமும் பெருகும்.

Similar News