ஆன்மிக களஞ்சியம்

ஆத்ம பலம் பெற-ஆஞ்சநேயர் விரதம்

Published On 2024-09-23 12:11 GMT   |   Update On 2024-09-23 12:11 GMT
  • கோதுமையில் செய்த ரொட்டியைப் பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.
  • ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்த செந்தூரத்தைப் பூச வேண்டும். இதனால் விரும்பிய பலன்களைப் பெறலாம்.

ஆஞ்சநேயரை எல்லா நாட்களிலும் வழிபடலாம்.

அதற்கு வசதிப்படாதவர்கள் புதன், வியாழன், சனி இம்மூன்று கிழமைகளில் வழிபடலாம்.

ஸ்ரீஆஞ்சநேயரின் திருவுருவப் படத்தையோ அல்லது ராமர் பட்டாபிஷேகத்தையோ பூஜையில் வைத்து, அவருக்கு நைவேத்தியமாக அவரவர் வசதிக்கேற்ப பழங்களையும், வடை போன்ற இன்ன பிறவற்றையும் சமர்ப்பிக்கலாம்.

துளசி மாலையும், வெற்றிலைச்சுருள் மாலையும் ஆஞ்சநேயருக்கு விசேஷமானவை.

பூஜையை ஆரம்பிக்கும்போது 'ஸ்ரீராமஜெயம்' அல்லது "ஸ்ரீராம ஜெயராம ஜெய ஜெய ராம" என்ற மந்திரத்தை 54 முறை அல்லது 108 முறை தியானிக்க வேண்டும்.

அதன்பிறகு தமது பிரார்த்தனையை சொல்லி நாமாவளி மற்றும் மலர் வழிபாட்டினால் அர்ச்சனை செய்ய வேண்டும். கவசம் மற்றும் ஸ்தோத்திரங்களைப் பாராயணம் செய்ய வேண்டும்.

ஓம் ஹம் ஹனுமதே நம... என்ற மந்திரத்தை சொல்லி அனுமனின் தலையில் துளசிகளும் வாசனை மலர்களும் வைத்தால் கஷ்டங்கள் யாவும் பறந்து போகும்.

அனுமனின் ஆரத்தியின்போது 5, 11, 50, 108 நெய் நிரப்பிய சிவப்பு திரியைப் பயன்படுத்த வேண்டும்.

கோதுமையில் செய்த ரொட்டியைப் பொடி செய்து தயாரிக்கப்பட்ட பலகாரம், வாழைப்பழம் ஆகியவற்றை படைக்க வேண்டும்.

ஆஞ்சநேயரின் சரீரத்தில் தைலம் கலந்த செந்தூரத்தைப் பூச வேண்டும். இவ்வாறு செய்வதால் விரும்பிய பலன்களைப் பெறலாம்.

ஆஞ்சநேய விரதம் இருந்தால் பிரிந்து சென்ற கணவன்மனைவி வாழ்வில் ஒற்றுமையாக இருப்பர். பகை மாறி வெற்றி உண்டாகும்.

தாய், தந்தை, அண்ணன், தம்பி உறவு பலம்பெறும். ஆத்ம பலம், சம்பத் பலம் ஆகிய ஆறு வகையான பலன்களும் நிரந்தரமாக கிடைக்கப்பெறுவர்.

அனுமன் விரதம் இருப்பவர்கள் குபேரனுக்கு இணையாக வாழ்வார்கள். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

சகல வியாதிகளும் விலகும். மோட்சம் பெறலாம்.

Similar News