ஆன்மிக களஞ்சியம்

காண்போரை இன்பக் கடலில் மூழ்கடிக்கும் திருவிழா

Published On 2024-09-23 12:03 GMT   |   Update On 2024-09-23 12:03 GMT
  • மாலை வேளைகளில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.
  • ஆறாவது நாள் இரவு யானை வாகனத்தில் பகவான் பவனி வருவார்.

ஐந்தாம் நாள் திருவிழா அன்று காலையில் மோகினி அவதார உத்சவம் நடைபெறும். இரவு எம்பெருமான் கருடாழ்வார் மீது பவனி வந்து அருட்காட்சி தந்து அருளுகிறார்.

கருட வாகனத்திற்கு வெண்பட்டுக் குடைகள் சமர்ப்பிக்கும் வழக்கம் இருந்து வருகிறது. ஆறு பெரிய குடைகளும், நான்கு சிறிய குடைகளும் சமர்ப்பிக்கப்படும்.

இக்குடைகள் சென்னையிலிருந்து திருமலைக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.

கருடோத்சவ தினத்தன்று மூலவருக்கு அணிவிப்பதற்காக விலை உயர்ந்த பட்டாடைகள் தயாரித்து ஒரு கண்ணாடிப் பெட்டியில் வைத்து தினசரி பூஜை செய்வர்.

காலை, மாலை இரு வேளைகளிலும், சின்ன சேஷவாகனம், பெரிய சேஷவாகனம், தங்கத் திருச்சி, ஹம்சவாகனம், முத்துப்பந்தல், கல்ப விருஷம், சர்வ பூபால வாகனங்கள், பல்லக்கு கருட சேர்வை, ஹனுமந்த வாகனம், சூரிய, சந்திரப்பிரபை வாகனம், திருத்தேர், குதிரை வாகனம் இப்படி பல வாகனங்களில் பெருமாள் திருவீதி உலா வருகிறார்.

குடை, சாமரம், மங்கள வாத்தியம் முதலியவற்றுடன் வடமொழி மறையும், தென் மொழி மறையும் பாராயணம் செய்ய பக்தர்களின் பஜனை புடை சூழ பிரம்ம உத்சவம் நடைபெறும். இத்திருவிழா காண்போரை இன்பக்கடலில் மூழ்கச் செய்யும்.

மாலை வேளைகளில் ஊஞ்சல் சேவை நடைபெறும்.

ஆறாவது நாள் இரவு யானை வாகனத்தில் பகவான் பவனி வருவார்.

இதற்கு முன்பாக வசந்த உத்சவம் நடைபெறும். வெள்ளை வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்டு குங்குமக் குழம்புடன் கூடிய சந்தனத்தை வாரி அள்ளி வழங்கிக் கொண்டு பவனி வருகிறார்.

தேர் திருவிழா அன்ற பகவான் திருத்தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

திருவிழாவின் கடைசி தினமான திருவோணத்தன்று சுவாமி புஷ்கரணியில் சக்கரத்தாழ்வாருக்கு நீரோட்டம் நடைபெறும்.

பின் கொடியிறக்கம் (துவஜாவரோகணம்) நடைபெற்றுத் திருவிழா இனிதே நடைபெறுகிறது.

இவ்வாறு ஒவ்வொரு ஆண்டும் திருமலையில் பிரம்ம உத்சவம் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Similar News