ஆன்மிகம்
கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்
கூத்தனூர் சரஸ்வதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கல்வி கடவுள் சரஸ்வதிக்கு இந்தியாவிலேயே திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே கூத்தனூரில் தனி கோவில் உள்ளது. இக்கோவிலில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் முன்பு சுவாமி வழிபாடு செய்து பேனா, பென்சில், நோட்டு, புத்தகம் ஆகியவற்றை வைத்து பூஜை செய்து பள்ளியில் சேர்க்கிறார்கள். .
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோவிலில் திருப்பணி வேலைகள் கடந்த ஒரு ஆண்டாக நடைபெற்று வந்தது. திருப்பணி வேலைகள் நிறைவு பெற்றதையொட்டி நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 24-ந் தேதி முதல் விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், வாஸ்து சாந்தியும் 30-ந் தேதி வரை 7 கால யாகசாலை பூஜைகள் நடந்தது.
நேற்று காலை 6 மணிக்கு 8-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. பின்னர் கங்கை, யமுனை, காவிரி, பிரம்மபுத்திரா ஆகிய புண்ணிய நதிகளில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்கள் அடங்கிய கடங்களுக்கு சிறப்பு பூஜை நடந்தது. இதை தொடர்ந்து விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேக ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர்கள் கணேசன், பிச்சை, ஜெயலட்சுமி, செயல் அலுவலர் வெங்கடகிருஷ்ணன், ஆய்வாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் செய்து இருந்தனர்.