ஆன்மிகம்

திதிகளின் வழிபாடு

Published On 2018-07-20 05:00 GMT   |   Update On 2018-07-20 05:00 GMT
ஒவ்வொரு திதியையும் பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால், வறுமை நீங்கும். அனைத்து துன்பங்களும் விலகும்.
லலிதா பரமேஸ்வரியை ஸ்ரீசக்கர ரூபத்தில் வழிபடும் முறை ‘ஸ்ரீவித்யை’ எனப் போற்றப்படுகிறது. ஸ்ரீவித்யை தேவியின் அம்ருத கலைகள், பதினைந்து பாகங்களாகப் பிரிந்து ஒவ்வொரு கலையும் ஒவ்வொரு தேவியாக உருவம் பெற்று பதினைந்து நித்யா தேவிகளாக தேவியைச் சுற்றி கொலுவீற்றுள்ளனர். இவர்கள் அனைவரும் அம்பிகையின் ஓர் அங்கமாக பாவிக்கப்படுகின்றனர்.

பவுர்ணமியுடன் முடிவடையும் சுக்லபட்சம் (வளர்பிறை) 15 நாட்களும், அமாவாசையுடன் முடிவடையும் கிருஷ்ண பட்சம் (தேய்பிறை) 15 நாட்களுமாக ஒரு மாதத்தின் இரு பிரிவுகளாக அமைந்துள்ளன. மகா நித்யாவின் கலைகளில் தோன்றிய பதினைந்து திதி நித்யாக்களும், ஒவ்வொரு பட்சத்திற்கும் ஒருநாள் என மாதத்தில் இரு நாட்கள் இப்பிரபஞ்சத்தை நிர்வகிக்கும் பொறுப்பை மேற்கொள்கின்றனர்.

தெய்வங்களை கோகுலாஷ்டமி, ராமநவமி போன்ற திதிகளிலும், முன்னோர்கள் கடன்களை அமாவாசை அல்லது அவர்கள் இறந்த திதிகளிலும் நாம் வழிபட்டு வருகிறோம். ஆனால், அதே நாளில் இந்தத் திதிக்குரிய தேவதைகளை நாம் வழிபடுவதில்லை. அதனால் கூட நமக்கு உரிய முழு பலன்களும் கிடைப்பதில்லை என்று சொல்லலாம். ஒவ்வொரு திதியையும் பரிபாலனம் செய்யும் மூல தேவிகளை நாம் மறவாமல் வழிபட்டால், வறுமை நீங்கும். அனைத்து துன்பங்களும் விலகும்.

Tags:    

Similar News