ஆன்மிகம்

வைகுண்ட ஏகாதசி: செய்ய வேண்டியதும், செய்யகூடாததும்

Published On 2018-12-18 06:33 GMT   |   Update On 2018-12-18 06:33 GMT
வைகுண்ட ஏகாதசியான இன்று சில விஷயங்களை கண்டிப்பாக செய்ய வேண்டும். அதேபோல் சில விஷயங்களை செய்யக்கூடாது. அவை என்னவென்று அறிந்து கொள்ளலாம்.
ஏகாதசி அன்று பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் நாமத்தை சொல்வது, அதிலும் குறிப்பாக கலியுக தாரகமந்திரமான ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே ஹரே ராம ஹரே ராம ராம ராம ஹரே ஹரே என்ற மந்திரத்தை 108 முறை உச்சரிக்கவும். எத்தனை முறை சொல்கிறோமோ அந்த அளவு பலன் கிடைக்கும்.

மற்றும் பகவத்கீதை, பாகவதபுராணம் போன்ற பகவான் சம்பந்தமான புத்தகங்களை படிக்கவும். அன்று முழுவதும் சொல், செயல், சிந்தனை அனைத்தும் பகவான் கிருஷ்ணரிலேயே ஈடுபடுத்த வேண்டும். ஏகாதசி அன்று சினிமா டிவி பார்ப்பது. பரமபதம் ஆடுவதும், வீண் பேச்சு பேசி காலவிரயம் செய்வதும் கூடாது.

மாதமாதம் வரும் ஏகாதசி விரதமிருந்தாலே பக்தி வளரும். அதிலும் வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி) அன்று முழு விரதம் இருந்தால் பகவான் கிருஷ்ணர் சுலபமாக முக்திப் பாதையை காட்டுவார் என நமது சாஸ்த்திரங்களில் கூறியுள்ளது.

ஏகாதசி திதி (முக்கியமாக வைகுண்ட ஏகாதசி) நாட்களில் தாய், தந்தைக்கு சிரார்த்தம் (நினைவுநாள்) வந்தால் அன்று நடத்தாமல் மறுநாள் துவாதசியன்று நடத்த வேண்டும். அன்று கோயில்களில் தரப்படும் பிரசாதத்தைக் கூட சாப்பிடக்கூடாது.

ஏகாதசியன்று உண்ணாமல் இருப்பவர்களை கேலி செய்து அவர்களை உண்ண வைப்பவன் நரகத்திலும் மிகக்கீழான நரகத்திற்கு செல்வான். இந்நாளில் துளசி இலை பறிக்கக்கூடாது. தேவையானதை முதல்நாளே பறித்து வைத்து விடவேண்டும்.
Tags:    

Similar News