ஆன்மிகம்

நாமக்கல் ஆஞ்சநேயருக்கு தினமும் நடக்கும் அபிஷேகம்

Published On 2019-01-07 07:45 GMT   |   Update On 2019-01-07 07:45 GMT
நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் 18 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயருக்கு தினமும் அபிஷேகம் மற்றும் பூஜையும் நடைபெறுகிறது.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் உள்ள ஆஞ்சநேயர் 18 அடி உயரம் கொண்டவர். தினமும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் மற்றும் பூஜையும் நடைபெறுகிறது. காலை 6.30 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அதன்பிறகு காலை 9 மணிமுதல் 9.30 மணிவரை காலசந்தி நடைபெறும்.

9.30 மணிக்கு மேல் அபிஷேகம் நடைபெறும். அதாவது நல்லெண்ணை, பஞ்சாமிர்தம், பால், தயிர், மஞ்சள், சந்தனம் போன்ற நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். பின்னர் சொர்ண அபிஷேகம் செய்யப்படும். அதன்பிறகு மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். அதாவது வடைமாலை இருந்தால் அணிவிக்கப்படும் பக்தர்கள் பணம் கட்டி இருந்தால் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப தங்க கவசம் மற்றும் வெள்ளி கவசம் சாத்தப்படும். முத்தங்கி அலங்காரமும் செய்யப்படும்.

சில ஆண்டுகளுக்கு முன்புவரை இந்த அபிஷேக செலவை ஒருவர் மட்டுமே ஏற்கும் நிலை இருந்தது. தற்போது இதில் கோவில் நிர்வாகம் மாற்றம் செய்து 3 பேர் செலவை ஏற்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புஷ்ப அங்கி அலங்காரம், வெண்ணெய் காப்பு மற்றும் சந்தன காப்பு அலங்காரம் ஆகியவற்றுக்கும் தனித்தனியாக முன்பதிவு நடந்து வருகிறது.
Tags:    

Similar News