ஆன்மிகம்

புதிர் விருந்து

Published On 2019-01-28 08:38 GMT   |   Update On 2019-01-28 08:38 GMT
தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தில் புதிர் விருந்து என்னும் நிகழ்வு விசேஷமானது. இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில், விவசாயிகள் இந்த நிகழ்வை சமயச் சடங்காகவே செய்கின்றனர்.
தை மாதம் வரும் பூச நட்சத்திரத்தில் புதிர் விருந்து என்னும் நிகழ்வு விசேஷமானது. இலங்கை யாழ்ப்பாணம் பகுதியில், விவசாயிகள் இந்த நிகழ்வை சமயச் சடங்காகவே செய்கின்றனர். தைப் பூசம் அன்று அதிகாலையில் வீட்டை சுத்தம் செய்து நீராடி, நெல் பயிரில் அதிக மகசூல் கிடைக்க இறைவனை வேண்டுவார்கள்.

வீட்டில் குத்துவிளக்கேற்றி, பிள்ளையார் பிடித்து, நிறைகுடம் தண்ணீர் வைத்து, அவற்றின் முன்பாக நெல் அறுக்கும் அரிவாளையும் வைப்பார்கள். பின்னர் அவற்றுக்கு தேங்காய் உடைத்து தூப, தீபம் காட்டுவார்கள்.

வழிபாடு முடிந்ததும் குடும்பத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் அரிவாள்களுடன் தங்களின் வயலுக்குச் செல்வார்கள். அங்கு கிழக்கு திசையில் நின்று, சூரியனை வணங்கி விட்டு தேங்காய் உடைத்து வழிபட்டு விட்டு, நெற்கதிர்களை அறுத்து வீட்டுக்கு கொண்டு வருவார்கள். அந்த நெற்கதிரை, இறைவனின் படத்திற்கு முன்பாக வைத்து வழிபடுவர். வயலில் இருந்து முதல் முதலாக நெல் தானியங்களை வீட்டிற்கு எடுத்து வருவதை ‘புதிர் எடுத்தல்’ என்பார்கள்.

அப்படி எடுத்து வரப்பட்ட நெல்கதிரில் இருந்து அரிசி மணிகளைப் பிரித்து, அதில் பொங்கல் வைப்பார்கள். கறி வகைகள், நெய், தயிர், பழங்கள், சர்க்கரைப் பொங்கல் ஆகியவற்றுடன் உணவு படைக்கப்பட்டு, அதனை வீட்டில் உள்ளவர்களும், உறவினர்களும் உண்பார்கள். இதுவே ‘புதிர் விருந்து’ ஆகும்.
Tags:    

Similar News