ஆன்மிகம்

கைகேயி மீது அளவு கடந்த பாசம் கொண்ட மந்தரை

Published On 2019-02-06 05:38 GMT   |   Update On 2019-02-06 05:38 GMT
மன்னன் அஸ்வபதியின் அரண்மனையில் பணிபுரிந்தவள் மந்தரை மன்னனின் மகளான கைகேயியை தாய் போல் இருந்து வளர்த்தவள். மந்தரைக்கு கைகேயி மீது அளவு கடந்த பாசம் உண்டு.
கேகய நாட்டு மன்னன் அஸ்வபதியின் அரண்மனையில் பணிபுரிந்தவள் மந்தரை. மன்னனின் மகளான கைகேயியை தாய் போல் இருந்து வளர்த்தவள். கைகேயியை தசரத சக்கரவர்த்தி மனம் முடித்து அயோத்தி அழைத்து வரும் போது, கைகேயிக்கு துணையாக மந்தரையும் அயோத்தி வந்து விட்டாள்.

மந்தரைக்கு கைகேயி மீது அளவு கடந்த பாசம் உண்டு. அதனால் அவளுக்கு கவுசல்யாவின் மகனான ராமனின் மீது வெறுப்பு உண்டானது. மந்தரை கூன் விழுந்தவள் என்பதால் அவளை ‘கூனி’ என்றும் அழைப்பார்கள்.

ஒரு முறை சிறுவனாக இருந்த ராமன், மந்தரையின் கூனை நேராக்க மண் உருண்டைகளை அவள் மீது வீசினான். அதில் மந்தரை நிலைதடுமாறி கீழே விழுந்தாள். அதைப் பார்த்து அங்கிருந்த பணிப்பெண்கள் பலரும் சிரித்துவிட்டனர். இதனால் ராமனின் மீதான மந்தரையின் வெறுப்பு அதிகமாகிவிட்டது.

மந்தரை செய்த சூழ்ச்சியின் காரணமாகவே, ராமன் 14 ஆண்டுகள் வனவாசம் செல்ல வேண்டிய நிலை உருவானது.
Tags:    

Similar News