பேசும் கன்னிமார் கோவிலில் சிறப்பு பூஜை
- பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
- பக்தர்கள் விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர்.
காஞ்சரம்பேட்டை அருகே பாறைபட்டி கிராமத்தில் ஆடி மாத சர்வ அமாவாசை, ஆடி மாத முதல் தேதிபிறப்பையொட்டி சிறப்பு பூஜைகள் நடந்தது. இதில் கிழக்கு முகம் பார்த்து அமர்ந்த நிலையில் உள்ள கன்னிமார் ஏழுஅம்மன் சிலைகளுக்கும் ரோஜா, மல்லிகை, முல்லை, அரளி, சம்மங்கி, மரிக்கொழுந்து, உள்ளிட்ட பல்வேறு பூக்களால் அலங்கரிக்கபட்டு, பட்டாடைகள், நாணல் புல்கட்டப்பட்டிருந்தது. தொடர்ந்து உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும், சிறப்பு பூஜைகள், தீபாராதனைகள், கூட்டு வழிபாடுகள் நடந்தது. பின்னர் அங்குள்ள மண்டப வளாகத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்த பூஜையில் மதுரை, திண்டுக்கல், தேனி, மாவட்டங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு விளக்கேற்றி சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக அதே ஊர் சித்தி விநாயகர், மந்தை கருப்பு சுவாமி கோவிலிலும் பூஜைகள் நடந்தது. விழா ஏற்பாடுகளை பாறைபட்டி கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.