வழிபாடு

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மஹோற்சவம் நிறைவு

Published On 2022-11-24 07:20 GMT   |   Update On 2022-11-24 07:20 GMT
  • நிறைவு நாளில் சண்டிகேஸ்வரர் ஹோமம் நடந்தது.
  • பஞ்சமூர்த்திகள் வைபவம் நடந்தது.

திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் தெலுங்கு கார்த்திகை மாதத்தில் ஒரு மாதம் ஹோம மஹோற்சவம் கடந்த அக்டோபர் மாதம் 26-ந்தேதியில் இருந்து நடந்து வந்தது. முதலில் கணபதி ஹோமம், சுப்பிரமணியசாமி ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம், பைரவர் ஹோமம், நவக்கிரக ஹோமம், காமாட்சி ஹோமம், கபிலேஸ்வரர் ஹோமம் நடந்து வந்தது.

நிறைவு நாளான நேற்று சண்டிகேஸ்வரர் ஹோமம் நடந்தது. பின்னர் மகா பூர்ணாஹுதி, கலச உத்வாசனம், மகாசாந்தி அபிஷேகம், கலசாபிஷேகம், திரிசூல ஸ்நானம், அங்குரார்ப்பணம் நடந்தது. மாலை லட்சதீப ஆராதனை, பஞ்சமூர்த்திகளான விக்னேஸ்வரர், சுப்பிரமணியசாமி, கபிலேஸ்வரர், காமாட்சி தாயார், சண்டிகேஸ்வரருக்கு ஆராதனை, அதன்பிறகு பஞ்சமூர்த்திகள் வைபவம் நடந்தது. இத்துடன் ஒரு மாதம் நடந்த ஹோம மஹோற்சவம் முடிந்தது.

Tags:    

Similar News